Rasi Palan This Week: தனுசு ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. எந்த விஷயத்தில் கவனம் தேவை?

Subscribe to Oneindia Tamil

Rasi Palan This Week: ஜூலை 13 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி (ஆனி 29 முதல் ஆடி 3 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிடக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

rasi-palan-this-week-dhanusu-sign-will-get-good-benefits-lots-of-money-in-this-week

சூரிய பகவான் கடக ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆடி மாதமாகும். ஜூலை 27 ஆம் தேதி ஆடி மாதம் பிறக்கப் போகிறது. அம்மனுக்கு உகந்த மாதமான இந்த ஆடி மாதத்தில் பல்வேறு முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், ஜூலை 13 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி (ஆனி 29 முதல் ஆடி 3 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

தனுசு

தனுசு ராசி, விருச்சிகம் லக்னத்திற்கு மன அழுத்தம் கொள்ளாமல் இருப்பது நல்லது. தான் உண்டு, தன் வேலை உண்டு என்றிருப்பது நன்மை பயக்கும். சட்டத்திற்குப் புறம்பான விஷயங்களில் ஈடுபடுபவர்களிடம் இருந்து தள்ளியிருப்பது நல்லது. வெளியிடத்திலும், குடும்பத்திலும் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். சுபவிரயங்கள் ஏற்படும் நல்ல காலகட்டம்.

தொழில்

அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். தொழில் ரீதியாக நிறைய நன்மைகள் ஏற்படும். உத்தியோகத்திலும், வியாபாரத்திலும் இருந்து வந்த சங்கடங்கள் நிவர்த்தியாகும். உறவுகள் மேன்மை அடைவதற்கான வாய்ப்புள்ளது. அம்பாள், தெய்வ வழிபாடுகளைச் செய்து மகிழ்வீர்கள். பண வரவு உண்டாகும். பழைய கடன்களை எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக அடைத்து முடிப்பீர்கள்.

யோகம்

அஷ்டமத்தில் சூரியன், குரு சேருவதால் சிறு சிறு பிரச்சனைகள் காணப்படும். எதிர்பாராத ஆஃபர், வேலைகள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. எதிர்பாராத நல்ல விஷயங்கள் நடக்கும் யோகம் உண்டாகும். அதீத பிரஷர் உண்டாகும் வாய்ப்புள்ளது. அப்பா வழி, அம்மா வழி உறவினர்கள் வழியாக ஏதாவது செய்திகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.

கவனம்

புதன் வக்கிரமாக இருப்பதால் கம்யூனிகேஷனில் கவனமாக இருக்க வேண்டும், கணவன், மனைவியின் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது. பயணங்களில் தடை, தாமதம் வருவதற்கான வாய்ப்புள்ளது. பெண்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். பொருளாதாரத்தில் ஒரு முக்கியமான மாற்றம் வருவதற்கான வாய்ப்புள்ளது.

வழிபாடு

காது, மூக்கு, தொண்டை தொடர்பான பாதிப்புகளில் அதீத கவனம் தேவை. கண் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. லட்சுமி நரசிம்மர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 80 சதவீதம் நன்றாக இருக்கும். ஹயக்ரீவர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+