Rasi Palan This Week: சிம்ம ராசியின் கதவை தட்டும் அதிர்ஷ்ட தேவதை.. எதிர்பாராத யோகம் தேடி வருது

Subscribe to Oneindia Tamil

Weekly Rasi Palan: ஜூலை 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி (ஆடி 4 முதல் 10 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

rasi-palan-this-week-immam-rasi-people-will-get-good-luck-in-this-week

சூரிய பகவான் கடக ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆடி மாதமாகும். ஜூலை 17 ஆம் தேதியான நேற்று ஆடி மாதம் பிறந்துள்ளது. அம்மனுக்கு உகந்த மாதமான இந்த ஆடி மாதத்தில் பல்வேறு முக்கய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், ஜூலை 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி (ஆடி 4 முதல் 10 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி, லக்கினம் சார்ந்த நபர்களுக்கு விரயங்கள் அதிகமாக இருப்பதால் எல்லா பொருள்களிலும் கவனமாக இருக்க வேண்டும். சுபவிரயம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. உறவுகள் தொடர்பான விஷயங்களில் மேன்மை ஏற்படும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும் காலகட்டம்.

யோகம்

கொடுத்த வாக்கை வீட்டிலும்,வெளியிடத்திலும் காப்பாற்றக்கூடிய யோகம் உண்டாகும். வண்டி, வாகனத்தில் புதிய மாற்றங்களை, புதிய விஷயங்களை செய்வீர்கள். புதிய படிப்புகளை படிப்பீர்கள். புதிய தொழில் ஆரம்பிக்கும் யோகம் உண்டாகும். கணவன், மனைவியின் அந்தரங்க விஷயங்களில் மற்றவர்கள் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

பெயர் புகழ்

உறவுகளால் தேவையில்லாத பாதிப்புகள், சங்கடங்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது. படைப்பாளிகள், கலைத் துறையினர், மீடியா துறையினருக்கு பெரிய பெயர் புகழ் கிடைக்கும் அமைப்பு உண்டாகும். லாப ஸ்தானத்தில் புதன் அமர்ந்திருப்பது பெரும் அதிர்ஷ்டம் கிடைக்கும். நம்ப முடியாத வகையில் பொறுப்பு, பதவி, முன்னேற்றம் ஏற்படக்கூடிய அற்புதமான நேரம்.

முன்னேற்றம்

பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். திருமண யோகம் உண்டாகும். பழைய காதலன், காதலி, நட்பு மீண்டும் சேரும் நேரமாக இருக்கும். பெரிய அளவுக்கு சந்தோஷமும், அதிர்ஷ்டமும் ஏற்படும். விரயத்தில் சூரியன் குரு சேர்ந்திருப்பதால் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. முதுகு தண்டுவடம், பின்புற வழிகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும். பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது.

வழிபாடு

சளி தொந்தரவுகள் வரும். செவ்வாய் பலமாக இருப்பதால் உத்தியோகத்தில் இருப்பவர்கள் பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 24, 25, 26 ஆம் தேதி உங்களுக்கு அற்புதமாக இருக்கும். தெய்வ அனுக்கிரகம் பரிபூரணமாக கிடைக்கும். நரசிம்மர் வழிபாடு சகலவித நன்மைகளையும் தரும். யாரையும் நம்பி பணம் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 75 சதவீதம் நன்றாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+