Rasi Palan This Week: உழைப்பால் முன்னேறும் தனுசு ராசி.. தொட்ட காரியங்களில் வெற்றி நிச்சயம்

Subscribe to Oneindia Tamil

Weekly Rasi Palan: ஆகஸ்ட் 3 முதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி (ஆடி 18 முதல் 24 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

rasi-palan-this-week-indha-vara-rasi-palan-for-dhanusu-rasi-august-3-to-9

சூரிய பகவான் கடக ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆடி மாதமாகும். ஜூலை 17 ஆம் தேதி ஆடி மாதம் பிறந்துள்ளது. அம்மனுக்கு உகந்த மாதமான இந்த ஆடி மாதத்தில் பல்வேறு முக்கய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், ஆகஸ்ட் 3 முதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி (ஆடி 18 முதல் 24 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசியினருக்கு மன அழுத்தம் கொள்ளாமல் இருப்பது நல்லது. உறவுகளை நினைத்து மனம் வேதனைப்படுவதைத் தவிர்ப்பது நல்லது. பதட்டமில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். விடுபட்ட தெய்வ வழிபாடுகளைச் செய்து மகிழ்வீர்கள். காது, மூக்கு, தொண்டை, சளி தொந்தரவு தொடர்பான பாதிப்புகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும்.

அனுகூலம்

இழுபறியாக இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். வியாபாரத்தில் காணப்பட்டிருந்த பிரச்சனைகள் நீங்கும். உத்தியோகம் ரீதியாக இருந்த சங்கடங்கள் தீரும். நரசிம்மர் வழிபாடு மன அழுத்தத்தை தீர்க்கும். உத்தியோகம் ரீதியாக, தொழில் ரீதியாக பெரும் அனுகூலத்தைப் பெற்றுத் தரும். தனிப்பட்ட முறையில் உங்களுடைய செல்வாக்கு கூடும். அசையும், அசையா பொருள் சேர்க்கை உண்டாகும். மேலதிகாரிகளுடன் தர்க்கம் வைத்துக் கொள்ளக் கூடாது.

உழைப்பால் வெற்றி..

முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டமாக இருக்கும். உழைப்பைப் போட்டால் அதற்கான ஊதியம் கிடைக்கும். திட்டமிட்ட காரியங்கள் சரியாக நடக்கும். வெளியூரில் இருந்து நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். பாட்டி, தாத்தாவின் அனுக்கிரகத்தால் நல்ல அனுகூலங்கள் காணப்படும். வராத பணங்கள் எல்லாம் திரும்பி வந்து சேரும் நல்ல காலகட்டம். காசு பணத்திற்குப் பஞ்சமே இருக்காது. சிக்கலான விஷயத்தில் இருந்து கூட வெளியில் வந்து விடுவீர்கள்.

வெற்றி வாய்ப்பு

வெற்றி வாய்ப்புகள் காத்திருக்கிறது. ஆரோக்கியத்தில் முதுகு தண்டுவடம், பின்பகுதி, அடிவயிறு, எலும்புகள் பாதிப்பில் இருந்து விடுபடக்கூடிய தன்மைகள் ஏற்படும். வேலையில் பெரிய அளவுக்கு முன்னேற்றமும், வெற்றியும் ஏற்படும். தெய்வத்தின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும். முருகப் பெருமான் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். சந்தோமும், பொருளாதார ஏற்றமும் 80 சதவீதம் நன்றாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+