பணக்கார யோகம் பெறும் மகர ராசி.. நீண்ட நாள் ஆசை நிறைவேறும் யோகம்.. என்ஜாய்

Subscribe to Oneindia Tamil

Weekly Rasi Palan: ஆகஸ்ட் 3 முதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி (ஆடி 18 முதல் 24 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மகர ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

Weekly rasi palan Magaram lucky zodiac signs

சூரிய பகவான் கடக ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆடி மாதமாகும். ஜூலை 17 ஆம் தேதி ஆடி மாதம் பிறந்துள்ளது. அம்மனுக்கு உகந்த மாதமான இந்த ஆடி மாதத்தில் பல்வேறு முக்கய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், ஆகஸ்ட் 3 முதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி (ஆடி 18 முதல் 24 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மகர ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

மகர ராசி பலன்

மகர ராசியினருக்கு துணை விஷயத்தில் அதீத கவனமாக இருக்க வேண்டும். உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவது, மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. ஆண்களாக இருந்தால் பெண்கள் விஷயத்திலும், பெண்களாக இருந்தால் ஆண்கள் விஷயத்திலும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

லாபம் ஏற்படும்

லாபம், அனுகூலம் உண்டாகும். பண வரவுக்கான அமைப்பு ஏற்படும். தைரியம் உண்டாகும். உள்ளூர், வெளியூர் செல்லும் யோகம் உண்டாகும். வண்டி, வாகன
மாற்றங்கள் ஏற்படும். வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். எல்லா விஷயத்திலும் நம்பிக்கை ஏற்படும். நிறைய நல்ல காரியங்கள் அடுத்தடுத்து நடக்கும். ஏற்றமும், நம்பிக்கையும் உண்டாகும்.

தடை நீங்கும்

தடைகள் அனைத்தும் தவிடு பொடியாகும். நீண்ட நாட்களாக இருந்த சங்கடங்கள் நிவர்த்தியாகும். வாகனத்தில் செல்லும்போது வேகமாகச் செல்வது, செல்போன் பேசிக் கொண்டே செல்வது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளுடன் தேவையில்லாத மன வருத்தங்கள் வருவதற்கான ஏற்படும். அவர்களுடன் வாக்குவாதம், தர்க்கத்தை தவிர்ப்பது நன்மை பயக்கும்.

முன்னேற்றம்

எல்லா விஷயங்களிலும் வெற்றியும், மேன்மையும் ஏற்படும். பண வரவு அற்புதமாக இருக்கும். பண விஷயத்தில் பஞ்சமே இருக்காது. சொத்துகள் கிடைப்பதற்கான யோகம் உண்டாகும். மனநிம்மதி, மன திருப்தி ஏற்படும் காலகட்டம். மகனுக்கு ஆண் குழந்தை பிறக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் வளர்ச்சி உண்டாகும். வாழ்க்கைத் துணையின் மூலமாக, அம்மாவின் மூலமாக நிறைய நன்மைகள், சந்தோஷம் ஏற்படும்.

வீடு வாங்கும் யோகம்

திட்டமிட்டு வெற்றி பெறுவீர்கள். வீடு வாங்கும் யோகம் உண்டாகும். தொழில் அமையும், சொத்துகள் அமையும். அரசுத் துறையில் வேலை கிடைக்கும். நிறைய விஷயங்களில் வெற்றிகள் ஏற்படும் காலகட்டமாக இருக்கும். தெய்வ அனுக்கிரகம் உண்டாகும். பிரச்சனைகள் தீரும். தேவையில்லாத பேச்சுகளை வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. பாக்கிய ஸ்தானத்தில் இருக்கும் சுக்கிரன் நிறைய நல்ல விஷயங்களை செய்வார்கள்.

வழிபாடு

இடுப்பு, புட்டம், கழிவுப் பாதை தொடர்பான பாதிப்புகளில் கவனம் தேவை. ஆஞ்சநேயர் வழிபாடு ஏற்றத்தைத் தரும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 90 சதவீதம் நன்றாக இருக்கும். துர்க்கை வழிபாடு மன நிம்மதியைத் தரும். முதுகு தண்டுவடம், சுழுக்கு போன்றவற்றில் அதீத கவனம் தேவை. தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது நல்லது. நீண்ட நாட்களாக எந்தவித உடல் பாதிப்புகளும் இல்லாதவர்களுக்கு கூட சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்றவை வருவதற்கான வாய்ப்புள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+