Rasi Palan This Week: மேஷ ராசியினரே மனைவி விஷயத்தில் கவனம்.. இந்த வாரத்தில் அதிர்ஷ்மும் காத்திருக்கு
Weekly Rasi Palan: ஆகஸ்ட் 3 முதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி (ஆடி 18 முதல் 24 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் கடக ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆடி மாதமாகும். ஜூலை 17 ஆம் தேதி ஆடி மாதம் பிறந்துள்ளது. அம்மனுக்கு உகந்த மாதமான இந்த ஆடி மாதத்தில் பல்வேறு முக்கய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், ஆகஸ்ட் 3 முதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி (ஆடி 18 முதல் 24 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
மேஷம் ராசி பலன்
மேஷ ராசியினருக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். இந்த வாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வெள்ளிக்கிழமையில் அம்பாள் வழிபாடு செய்வது நன்மையைத் தரும். கழுத்து, முதுகுப் பகுதிகளில் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால், தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது ஏற்றத்தைத் தரும்.
சந்தோஷம்
கணவன், மனைவிக்குள் சிறிய வாக்குவாதங்கள் கூட செய்யாமல் இருப்பது நல்லது. மேலதிகாரிகள் விஷயத்தில் இருந்து வந்த பதட்டங்கள் குறையும். மேலதிகாரிகளுக்கு உங்கள் மீது பயம் ஏற்படும் அளவுக்கு சந்தோஷமும், வெற்றியும் ஏற்படும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். அரசாங்க காரியங்களில் வெற்றி உண்டாகும்.
கவனம்
சமூகத்தில் உங்களை அழிக்க வேண்டும் என்று நினைத்தவர்களுக்கே பிரச்சனை வரக்கூடிய சூழல் உண்டாகும். சிறு சிறு டென்ஷன், பிரஷர், கணவன், மனைவி பிரிவு போன்றவை வரும். சந்திரன், ராகு சேர்க்கை இருப்பதால் மூத்தவர்களால் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. வண்டி வாகனங்கள், கால் முட்டி தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை.
சொந்த வீடு யோகம்
4 ஆம் இடத்தில் குரு, சூரியன் இருப்பதால் அரசு வேலை, வங்கியில் வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. அம்மாவின் ஆரோக்கியம் மேம்படும். இடமாற்றம் உண்டாகும். சொந்த வீடு வாங்குவதற்கான யோகம் உண்டு. ஆரோக்கியம் அற்புமாக இருக்கும். சுப்பிரமணியர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 80 சதவீதம் நன்றாக இருக்கும்.


Click it and Unblock the Notifications
