Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பணத்தை அள்ளும் நேரம்.. தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்
Weekly Rasi Palan: ஆகஸ்ட் 3 முதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி (ஆடி 18 முதல் 24 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் கடக ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆடி மாதமாகும். ஜூலை 17 ஆம் தேதி ஆடி மாதம் பிறந்துள்ளது. அம்மனுக்கு உகந்த மாதமான இந்த ஆடி மாதத்தில் பல்வேறு முக்கய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், ஆகஸ்ட் 3 முதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி (ஆடி 18 முதல் 24 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசியினருக்கு தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதைத் தவிர்ப்பது நல்லது. பழைய கடன்களை அடைத்து முடிக்கும் நல்ல காலகட்டம். 6 ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கு விரயம் இந்த வாரம் அதிகளவில் காணப்படும். மன அழுத்தம் தீரும். ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட சிறு பாதிப்புகளையும் அலட்சியப்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அனுகூலம்
அலர்ஜி தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள், ஏற்றங்கள் ஏற்படும். தொழில் நிமித்தமான அனுகூலங்கள் காணப்படும். மறைமுக எதிரிகளின் பிரச்சனை பரிபூரணமாக நிவர்த்தியாகும். பூர்வீகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும்.
சொத்துகள் சேரும்
நிலம் வாங்குவது, இடம் வாங்குவது, சொத்துகள் வாங்குவது போன்ற யோகம் உண்டாகும். விற்பனையாக சொத்துகளை விற்று மகிழ்வீர்கள். அண்ணன், தம்பிக்குள் சண்டை வந்து சரியாகும். பணம் சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். குழந்தை பாக்கியம் உண்டாகும். திருமணமாகும் யோகம் உண்டு. பண வரவு நன்றாக இருக்கும். லாபங்கள் காணப்படும். தொடர்ச்சியான முயற்சிகள் மூலமாக தொடர் பண வரவு உண்டாகும். கழுத்து சம்பந்தப்பட்ட பாதிப்புகள் வந்து போகும் அமைப்பு உள்ளது.
வழிபாடு
சுக்கிரன் நீச்சம் பெற்றுள்ளதால் வாரத்தின் இறுதிப் பகுதியில் தாயின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். சொந்த பந்த பெண்கள் சார்ந்த சில தகவல்கள் வரும் நேரம். எடுத்த காரியங்களில் எல்லாம் ஜெயம், புகழ் பெறக்கூடிய யோகம் உண்டாகும். ராஜகோபால சுவாமியை மனதார வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 90 சதவீதம் நன்றாக இருக்கும் அற்புதமான காலகட்டம்.


Click it and Unblock the Notifications
