Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு பிரச்சனைகளில் இருந்து விடுதலை.. அடுத்தடுத்து முன்னேற்றம்

Subscribe to Oneindia Tamil

Weekly Rasi Palan: ஆகஸ்ட் 3 முதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி (ஆடி 18 முதல் 24 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

rasi-palan-this-week-indha-vara-rasi-palan-for-rishabam-rasi-august-3-to-9

சூரிய பகவான் கடக ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆடி மாதமாகும். ஜூலை 17 ஆம் தேதி ஆடி மாதம் பிறந்துள்ளது. அம்மனுக்கு உகந்த மாதமான இந்த ஆடி மாதத்தில் பல்வேறு முக்கய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், ஆகஸ்ட் 3 முதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி (ஆடி 18 முதல் 24 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷப ராசியினருக்கு இந்த வாரத்தில் பதட்டம், டென்ஷன் போன்றவை எல்லாம் நீங்கும். நிம்மதி பெருமூச்சு விடும் காலமாக இருக்கும். சந்திரன் அமர்ந்துள்ளாதல் சிறு சிறு தொந்தரவுகள் வந்தாலும் பெரிய அளவில் எந்தவித பாதிப்பும் இருக்காது. புதன் 3 ஆம் இடத்திற்குச் சென்றுவிட்டதால் பள்ளி, கல்லூரி, நிறுவனங்களில் நடக்க வேண்டிய நிறைய வேலைகள் நடக்கும். பெரிய வாய்ப்புகள் வந்து சேரும்.

முன்னேற்றம்

நினைத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். தைரியம் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி ஏற்படும். நல்ல முன்னேற்றங்கள் காணப்படும். முதலீடுகளில் லாபம் கிடைக்கும். 2, 3 தேதிகளில் வேலையில் சிறு சிறு அழுத்தம் இருக்கலாம்.

அனுகூலம்

சுபகாரியத்திற்கான அனுகூலங்கள் காணப்படும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவில் ஏற்றம் காணப்படும். அசையும், அசையா பொருள் சேர்க்கை உண்டாகும். இழுபறியாக இருந்த சிக்கல் தீரும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து அனுகூலம் காணப்படும். வியாபாரத்தில் காணப்பட்டிருந்த பிரச்சனைகள் தீரும். தொடர்ச்சியாக இருந்த மன வருத்தங்கள் தீரும்.

கவனம்

குடும்பத்தில் அந்நியர் தலையீடு, மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. உறவினர்கள், நண்பர்கள் வந்தாலும் உங்களுடைய குடும்ப விஷயம், அந்தரங்க விஷயங்களில் தலையிடுவதைத் தவிர்த்துக் கொள்வது நன்மையை ஏற்படுத்தும். எதிரிகளிடம் கோபம் கொள்ளாமல் இருக்க வேண்டும்.

வழிபாடு

அரசு தொழில், கெளரவம், காரியங்களில் வெற்றியை ஏற்படுத்தும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கழிவுப் பாதை, அசிடிட்டி தொடர்பான பாதிப்புகளில் கவனம் தேவை. மகாலட்சுமி வழிபாடு, காமாட்சி அம்மன் வழிபாடு சகலவிதத்தில் ஏற்றத்தை ஏற்படுத்தும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 70 சதவீதம் நன்றாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+