அடித்து ஆடும் விருச்சிக ராசி.. அதிர்ஷ்டம் உங்கம் பக்கம் தான்.. பண மழையில் நீச்சலடிக்கும் யோகம்

Subscribe to Oneindia Tamil

Weekly Rasi Palan: ஆகஸ்ட் 3 முதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி (ஆடி 18 முதல் 24 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

rasi-palan-this-week-indha-vara-rasi-palan-for-viruchigam-rasi-august-3-to-9

சூரிய பகவான் கடக ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆடி மாதமாகும். ஜூலை 17 ஆம் தேதி ஆடி மாதம் பிறந்துள்ளது. அம்மனுக்கு உகந்த மாதமான இந்த ஆடி மாதத்தில் பல்வேறு முக்கய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், ஆகஸ்ட் 3 முதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி (ஆடி 18 முதல் 24 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசியினருக்கு உறவுகள் தொடர்பான விஷயங்களில் அனுகூலமும், சந்தோஷமும் ஏற்படும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் பரிபூரண நிவர்த்தியாகும். வியாபாரம், தொழில் ரீதியாக திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படும். புதிதாக அறிமுகமாகும் நபர்களால் குழப்பங்கள் ஏற்படும். உறவுகள் என்று சொல்லிக் கொண்டு உங்களைப் பற்றி புறமுதுகில் பேசுவார்கள்.

பரிகாரம்

திங்கள்கிழமை தோறும் பசு மாடுகளுக்கு கோதுமை சம்பந்தப்பட்ட உணவு, வெல்லத்தை கலந்து கொடுப்பது, காய்கறிப்பது கொடுப்பது நன்மையைத் தரும். தான் உண்டு, தன் வேலை உண்டு என்று சுருங்கிக் கொள்வது நல்லது. தொழில், உத்தியோகம், வியாபாரம் ஏற்றத்தை ஏற்படுத்தும். துணை விஷயத்தில் வாக்குவாதம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சிக்கல் தீரும்

எல்லா விதமான பிரச்சனைகள் இருப்பினும் குறை ரத்த அழுத்தம், அதீத ரத்த அழுத்தம், ரத்த அடைப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த கவனமாக இருப்பது நன்மையைத் தரும். உறவுக்குள் கோபமில்லாமல் பார்த்துக் கொள்வது நன்மையைத் தரும். இழுபறியாக இருந்து வந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். உத்தியோகம் ரீதியாக சிறு சிறு சங்கடங்கள் காணப்பட்டாலும் நல்ல விஷயங்கள், சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.

ராஜயோகம்

அப்பாவின் மூலமாக ராஜயோகம் உண்டாகும். அப்பாவின் உதவி, வீடு, சொத்துகள், வேலை கிடைக்கும். அப்பாவின் ஆசிர்வாதத்தால் ஆண் குழந்தை பிறக்கும் யோகம் ஏற்படும். வெளியூர், வெளிநாடு, தூரதேசம், கடல் கடந்த பயணங்கள், புதிய வேலை வாய்ப்புகள், மெரிட்டில் சீட் கிடைப்பது போன்ற யோகம் உண்டாகும். திட்டமிட்டு வெற்றி பெறும் காலகட்டமாக இருக்கும். எல்லா விதத்திலும் லாபம், சந்தோஷம், வெற்றி கிடைக்கும்.

பணவரவு கொட்டும்

தெய்வ அனுக்கிரகம் பரிபூரணமாக கிடைக்கும். பெரிய அதிர்ஷ்டங்கள் உண்டாகும். சுக்கிரன் லாப ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் காசு, பணத்திற்குப் பஞ்சம் இருக்காது. நீங்கள் நினைத்த நல்ல விஷயங்கள் நடக்கும் காலகட்டம். நம்பும் விஷயங்கள் ஈஸியாக நடக்கும். அரசியல், அரசாங்கத்தில் பதவி கிடைக்கும். அரசு வேலை கிடைக்கும் யோகம் உண்டு. சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 90 சதவீதம் நன்றாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+