டபுள் தமாக்கா.. மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. சொந்த வீடு நிலம் செட்டிலாக போறீங்க
Weekly Rasi Palan: ஜூலை 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி (ஆடி 4 முதல் 10 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மகர ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் கடக ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆடி மாதமாகும். ஜூலை 17 ஆம் தேதியான நேற்று ஆடி மாதம் பிறந்துள்ளது. அம்மனுக்கு உகந்த மாதமான இந்த ஆடி மாதத்தில் பல்வேறு முக்கய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், ஜூலை 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி (ஆடி 4 முதல் 10 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மகர ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
மகரம்
மகர ராசியினர் குடும்பத்தில் துணை விஷயத்தில் வாக்குவாதம் வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடுவது, உங்களுடைய குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவி உடல்நிலையைப் பார்த்துக் கொள்ள வேண்டும். படபடப்பு, பிரஷர், கொழுப்பு, சர்க்கரை தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
சொத்து சேரும் யோகம்
சுபகாரியத்தில் இருந்து வந்த தடைகள் பரிபூரணமாக நீங்கும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். புதன்கிழமை தோறும் பசு மாடுகளுக்கு உணவு தானமாகக் கொடுப்பது தடைகள் எல்லாமே தவிடு பொடியாகும். குடும்பத்தில் இருந்து வந்த சங்கடங்கள் தீரும். 8 ஆம் இடத்தில் கேது இருப்பதால் பொறுமையாக வாகனங்களை ஓட்டுவது நல்லது. வேகமாக செல்வது, செல்போன் பேசிக் கொண்டே செல்வதை தவிர்ப்பது நல்லது.
தடைகள் நீங்கும்
தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் எதிர்பார்க்காத நன்மைகள் கிடைக்கும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். தடைபட்டிருந்த அனைத்து நல்ல காரியங்களும் நடக்கும். 7 ஆம் இடம் அற்புதமாக இருப்பதால் பெரிய அதிர்ஷ்டங்கள் ஏற்படும். சொத்துகள் சேரும். சொந்த வீடு, நிலம், இடம் வாங்கும் யோகம் உண்டாகும். கடன் கிடைக்கும். நிலம் வாங்கும் யோகம் உண்டு.
அனுகூலம்
வாடகைக்கு வீடு தேடுவோருக்கு வீடு கிடைக்கும். அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருப்பது, மேல் வீட்டுக்கு குடி போவது சாதகமாக இருக்கும். எந்த விஷயத்தை திட்டமிட்டாலும் அதில் ஏற்றம் பெறுவீர்கள். தெய்வ அனுக்கிரகம் உண்டாகும். அஷ்டம ஸ்தானத்தில் சுக்கிரன் கேது இருப்பதால் மனைவியின் கண், காது மூக்கு, இடது காதில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
வழிபாடு
ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும். சர்க்கரையை குறைத்துக் கொண்டு புரதம் அதிகம் எடுத்துக் கொள்வது நன்மை பயக்கும். பெரிய ஏற்றமும் சந்தோஷமும், மன நிம்மதியும் ஏற்படும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 85 சதவீதம் நன்றாக இருக்கும். பிரித்யுங்கரா தேவி வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.


Click it and Unblock the Notifications
