Rasi Palan This Week: மேஷ ராசிக்கு இனி ஏறுமுகம் தான்.. சொத்துகள் கிடைக்கும் யோகம்

Subscribe to Oneindia Tamil

Weekly Rasi Palan: ஜூலை 27 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி (ஆடி 11 முதல் 17 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

rasi-palan-this-week-mesham-rasi-people-will-get-good-fortunes-during-this-week

சூரிய பகவான் கடக ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆடி மாதமாகும். ஜூலை 17 ஆம் தேதியான நேற்று ஆடி மாதம் பிறந்துள்ளது. அம்மனுக்கு உகந்த மாதமான இந்த ஆடி மாதத்தில் பல்வேறு முக்கய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், ஜூலை 27 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி (ஆடி 11 முதல் 17 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

மேஷம் ராசி பலன்

மேஷ ராசியினருக்கு ஏற்றங்கள் நிறைந்த காலகட்டமாக இருக்கும். ஏற்றங்கள், பயணங்கள் ஏற்படும் காலகட்டம். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். கெளரவம் ஏற்படும். நிறைய பயணங்கள் மேற்கொள்வீர்கள். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். அலர்ஜி தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனம் தேலை. பெருமாள் வழிபாடு, ஸ்தோத்திரங்களைப் படிப்பது நிம்மதியை ஏற்படுத்தும்.

முன்னேற்றம்

உத்தியோகம், தொழில், வியாபாரம் ரீதியாக பெரிய முன்னேற்றங்களைப் பெறுவீர்கள். திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படும். எதிரிகள் உங்கள் வசமாவார்கள். சமாதான உடன்படிக்கையை ஏற்படுத்தக்கூடிய காலகட்டமாக இருக்கும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். முதலீடுகளைச் செய்து மகிழ்வீர்கள். இழுபறியாக இருந்த நிலைமைகள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும்.

பயணங்கள்

யோக பலன்களை அதிகளவில் பெறும் காலகட்டம். வாகனம் தொடர்பாக விஷயங்களுக்கு தீர்வு கிடைக்கும். நிறைய ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்வீர்கள். நல்ல மருத்துவம், உடற்பயிற்சியும் மேற்கொள்வீர்கள். நிம்மதியான தூக்கம் பெறுவீர்கள். வாழ்க்கை தரத்தை பொறுமையாக மாற்றிக் கொள்ளும் அமைப்பு உள்ளது.

அனுகூலம்

வீடு, நிலம், வாகனம், சொத்துகள் கிடைக்கும் யோகம் உண்டு. பிரிந்த உறவினர்கள் மீண்டும் சேர்வார்கள். உங்கள் ஊரிலேயே பிடித்த வேலை கிடைக்கும், பிடித்த கல்லூரி, பள்ளி கிடைக்கும். அரசு அதிகாரிகளாக, வங்கி அதிகாரியாக மாறும் யோகம் உண்டாகும்.

கடன் தீரும்

பெரிய வெற்றியும், சந்தோஷமும் ஏற்படும். வீட்டுக கடனை அடைத்து முடிப்பீர்கள். ஏராளமான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக நடக்கும். அடிவயிறு, கழிவுப் பாதை தொடர்பான பாதிப்புகள் நிவர்த்தியாகும். மருத்துவ செலவுகள் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். சந்தோஷம் ரீதியாக 80 சதவீதமும், பொருளாதார ரீதியாக 75 சதவீதமும் ஏற்றம் பெறக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+