மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இந்த வாரம் காத்திருக்கும் யோகம்

Subscribe to Oneindia Tamil

Rasi palan this week: நவம்பர் 3 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 17 ஆம் தேதி முதல் 22 வரை) காலகட்டத்தில் மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

rasi-palan-this-week-mesham-rishabam-mithunam-rasi-poople-will-get-good-benefits-in-this-week

கன்னியில் இருக்கும் சூரிய பகவான் துலாம் ராசிக்கு வரக்கூடிய மாதமே ஐப்பசி மாதமாகும். இந்த மாதத்தில் நிறைய பிரச்சனைகள் தீரும். சந்திரன் தனுசு ராசியில் இருந்து மீன ராசிக்கு செல்கிறார். செவ்வாய், குரு இணைவதால் அபரிமிதமான மாற்றமும், எதிர்பாராத சுப நிகழ்ச்சியும் நடக்கும் வாய்ப்புள்ளது. அதன்படி, நவம்பர் 3 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 17 ஆம் தேதி முதல் 22 வரை) காலகட்டத்தில் மேஷம், ரிஷபம், மிதுனம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசியினருக்கு உத்தியோகம், தொழில், வியாபாரம், படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஏதோ ஒரு வகையில் மன அழுத்தம் இருந்து கொண்டே இருக்கும். இருப்பினும், கவலைப்படுவதைத் தவிர்ப்பது நல்லது. எல்லா விஷயத்திலும் பயப்படுவதைத் தவிர்ப்பது நன்மை பயக்கும். குடும்பத்தில் மற்றவர்களின் தலையீடு, மற்றவர்கள் விஷயத்தில் உங்கள் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதைத் தவிர்ப்பது நல்லது. நிறைய சுப காரியங்களும், ஏற்றமும் உண்டாகும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை ஏற்படும். நல்ல வேலை ஆட்களை இழக்காமல் அவர்களை முறையாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். உணவுக் கட்டுப்பாடு, பழக்கவழக்கங்களில் அக்கறை செலுத்துவது நன்மை பயக்கும்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷப ராசியினருக்கு அரசுத் துறை, அரசியல்வாதிகள், தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்றம் ஏற்படும். இதுவரை இருந்து வந்த பலவிதமான கஷ்டங்களும், சங்கடங்களும் பரிபூரணமாக நிவர்த்தியாகும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும்.

நிறைய நல்ல காரியங்கள் நடக்கக்கூடிய அமைப்பு உள்ளது. மன வருத்தம், தொழிலில் வருத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். புதிய புதிய விஷயங்களில் ஈடுபடுவீர்கள். அதில் வெற்றி பெறக்கூடிய யோகம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசியினருக்கு நீண்ட நாட்களாக காணப்பட்டிருந்த பலவிதமான கஷ்டங்கள், சிக்கல்கள் நீங்கும். பெரிய முயற்சிகள் வெற்றியைத் தேடித் தரும். பிள்ளைகள் விஷயத்தில் காணப்பட்டிருந்த சங்கடங்கள் நிவர்த்தியாகும். உத்தியோகம், வியாபாரத்தில் ஏற்றம் ஏற்படும், ரத்த அழுத்தம், சர்க்கரை தொடர்பான பாதிப்புகளில் கவனம் தேவை.

தொழில் ரீதியாக வாக்குவாதத்தை தவிர்த்துக் கொள்வது நன்மை பயக்கும். வெளியிடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். புதிய முயற்சிகளால் லாபம், சந்தோஷம் ஏற்படும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் அதிக ஆர்வம் வெற்றியைத் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+