Rasi Palan This Week: பணக்கார யோகம் பெறும் மிதுன ராசி.. தொட்டதெல்லாம் துலங்கும் நேரம்
Weekly Rasi Palan: ஜூலை 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி (ஆடி 4 முதல் 10 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் கடக ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆடி மாதமாகும். ஜூலை 17 ஆம் தேதியான நேற்று ஆடி மாதம் பிறந்துள்ளது. அம்மனுக்கு உகந்த மாதமான இந்த ஆடி மாதத்தில் பல்வேறு முக்கய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், ஜூலை 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி (ஆடி 4 முதல் 10 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
மிதுன ராசி பலன்
மிதுன ராசியினருக்கு வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாமல் வாக்கு கொடுத்து அதை நிறைவேற்றுவதற்காக எதையாவது செய்து சட்ட சிக்கலில் சிக்கிக் கொள்வதற்கான வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனம் தேவை. தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் ஏற்றத்தைப் பெறுவீர்கள். முதலீடுகளுக்கு எந்தவித குறைவும் இருக்காது. இழுபறியாக இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும்.
தொழில்
தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். குடும்பத்திலும், வெளியிடத்திலும் வார்த்தைகளில் மட்டும் அதீத கவனமாக இருக்க வேண்டும். பசு மாடுகளுக்கு உணவளிப்பது சனி வக்கிரத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தீரும். தொழில் ரீதியாக மிகப்பெரிய வெற்றிகள் கிடைக்கும். எதிர்பார்க்காத நல்ல விஷயங்கள் நடக்கும். காது, மூக்கு, தொண்டை, அலர்ஜி, மூட்டுவலி, சளி தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை.
முன்னேற்றம்
பொருளாதாரத்தில் அற்புதமான முன்னேற்றங்கள் ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தன பாக்கியம் கைகூடி வரும். பண வரவுக்குப் பஞ்சம் இருக்காது. நகை வாங்குவது, வண்டி வாகனம் வாங்குவது போன்ற அமைப்பு உள்ளது. கணவன், மனைவி பெயரில் சேமிப்பைத் தொடங்குவீர்கள். பேச்சை அடிப்படையாக வைத்து தொழில் செய்பவர்களுக்கு விருதுகள், பாராட்டுகள், பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
வழிபாடு
புதிய கோர்ஸ்களை படிக்கும் யோகம் உண்டாகும். காய்ச்சல் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. செட்டிலாகக்கூடிய யோகம் உண்டாகும். மூகாம்பிகை தேவி தெய்வத்தை வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும்.












Click it and Unblock the Notifications