“நேரம் மாறுது.. வாழ்க்கையும் மாறுது”.. மேஷம் முதல் கன்னி வரை 6 ராசிகளுக்கான வார பலன்கள்

Subscribe to Oneindia Tamil

Rasi palan this week: செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையிலான (ஆவணி 28 முதல் புரட்டாசி 3) காலகட்டத்தில் மேஷம் முதல் கன்னி வரையிலான 12 ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

rasi-palan-this-week-what-benefits-will-mesham-to-kanni-zodiac-signs-get-from-september-14-to-20

இந்த வாரத்தில் ஆவணி மாதம் நிறைவடைந்து புரட்டாசி மாதம் ஆரம்பிக்கவுள்ளது. புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதமாகும். சிம்மத்தில் இருக்கும் சூரிய பகவான் கன்னி ராசிக்கு வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம், கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் செப்டம்பர் 27 ஆம் தேதி மஹாளயபட்சம் ஆரம்பிக்கிறது. மஹாளய அமாவாசை அக்டோபர் 10 ஆம் தேதி வருகிறது. இந்த நாளில் ஏழைகளுக்கு உணவு தானமாக அளிப்பது, அரிசி பருப்பு வாங்கி கோயிலுக்கு கொடுப்பது நன்மை பயக்கும்.

இதைத்தொடர்ந்து, அக்டோபர் 11 ஆம் தேதி நவராத்திரி ஆரம்பிக்கிறது. அந்த வகையில், செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையிலான (ஆவணி 28 முதல் புரட்டாசி 3) காலகட்டத்தில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசியினருக்கு எதிரிகளை வெல்லும் யோகம் உண்டாகும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு என எல்லா விஷயத்திலும் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வரும். பெரிய முதலீடுகளை செய்வீர்கள். முதலீடுகள் மூலமாக நல்ல லாபம் கிடைக்கும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் ஏற்படும். பணப் பிரச்சனை தீரும். எல்லா விஷயத்தையும் கட்சிதமாக முடிப்பீர்கள்.

உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பெரிய பொறுப்பு, பதவிக்கு வருவீர்கள். அரசாங்கம் தொடர்பான ஆர்டர்கள் கிடைக்கும். அரசாங்க விஷயங்களில் ஏற்றம் ஏற்படும். எல்லா விஷயங்களும் சாதகமாக முடியும். ரத்த அழுத்தம், சர்க்கரை தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

அழகு, ஆடம்பரம், சந்தோஷம் ஏற்படும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மனைவியினால் நன்மை ஏற்படும். மனைவியின் ஆரோக்கியம் மேம்படும். கணவன், மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். நிறைய கடன்கள் முடிவடையும். கொடுத்த பண பாக்கிகள் வந்து சேரும். சூரியன், கேது சேர்வதால் 18 ஆம் தேதி வரைக்கும் பிள்ளைகளால் ஏற்றம் ஏற்படும். பெருமாள், துர்க்கை வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். சுப்பிரமணிய புஜங்கத்தை கேட்பது நன்மை பயக்கும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 85 சதவீதம் நன்றாக இருக்கும்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசியினருக்கு பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதை தவிர்ப்பது நல்லது. நல்ல லாபங்கள் காணப்படும். குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். நிறைய வெற்றிகள் ஏற்படும். உத்தியோகம் ரீதியாக இருந்து வந்த சங்கடங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். எதிர்பார்க்காத நன்மைகள், ஆனந்தம் ஏற்படும்.

உத்தியோகம், தொழில், வியாபாரம், படிப்பு ரீதியாக நிறைய நன்மைகள் ஏற்படும். இழுபறியாக இருந்த விஷயங்கள் எல்லாம் மாறி சந்தோஷமும், ஏற்றமும் ஏற்படக்கூடிய அற்புதமான காலகட்டம். அடுத்தடுத்து நிறைய நல்ல விஷயங்கள் நடைபெற்று யோக பலன்கள் கிடைக்கும். எதிரிகள் விஷயத்தில் வெற்றி ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் அதீத கவனம் தேவை.

பஞ்சம ஸ்தானம் வலுவில்லாத நிலைமையில் இருப்பதால் குழந்தையின் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகள் பிரச்சனை செய்வது, உங்களுக்கு எதிராக மாறுவது, நீங்கள் அவர்களுக்கு அழுத்தம் கொடுப்பது போன்ற நிலைமைகள் இருக்கும். அப்பா, மூத்த மகனின் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மிதுனம் ராசி பலன்

மிதுனம் ராசியினர் பள்ளி, கல்லூரி, வங்கித் துறை, மருத்துவர்கள், கிளப், உற்பத்தித் துறையில் இருப்பவர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். கண்ணும் கருத்துமாக வேலை பார்ப்பது நல்லது. சின்ன பிழை நடந்தாலும் பெரிய பிரச்சனைகளைச் சந்திக்கும் சூழல் வரும். அரசாங்கம், அரசியல் சார்ந்த எந்த வேலைகள் இருந்தாலும் இழுபறியாக நடக்கும். வீட்டில் நிறைய கரண்ட் கட், ஒயர் பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளது.

பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். செப்டம்பர் 16, 17 ஆம் தேதி நல்ல பண வரவு நன்றாக இருக்கும். அடுத்தடுத்து முன்னேற்றம் வரக்கூடிய காலகட்டமாக இருக்கும். அசுர பலம் கிடைக்கும். நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். நேர்மையாக நின்று ஜெயிப்பீர்கள். புகழ், பெருமை, அந்தஸ்து, கெளரவம் உண்டாகும். வெளியூர் வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்பு ஏற்படும். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். படிப்பு நன்றாக இருக்கும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். தைரியம் ஏற்படும். எதிரிகள் விஷயத்தில் ஏற்றம் ஏற்படும். உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள், சிக்கல்கள் தீரும். பெருமாள், தாயார் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.

கடகம் ராசி பலன்

கடகம் ராசியினருக்கு பணம், பொருளாதாரம் தொடர்பான விஷயத்தில் நல்ல ஏற்றம் ஏற்படும். திடீரென திட்டமிடும் காரியங்களில் வெற்றி பெறும் யோகம் ஏற்படும். வீடு, சொத்து அமையும். நிறைய நகைகள் வாங்கும் அமைப்பு உள்ளது. பெண்களுக்கு அதிர்ஷ்டம் ஏற்படும். செப்டம்பர் 16, 17 ஆம் தேதி நிறைய நல்ல விஷயங்கள் நிறைய நடைபெறும்.

கழுத்து சம்பந்தப்பட்ட பாதிப்புகள் வரும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. சிலருக்கு தொண்டை வலி, பின்புறப் பகுதி, தோள்பட்டை வலி வரும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. வண்டி, வாகனங்களில் ஆவணங்களை சரிபார்க்காமல் சென்று போலீஸிடம் சிக்கும் வாய்ப்புள்ளது. கோபம் அதிகரிக்கும். செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் அமைதியைக் கடைப்பிடிப்பது நல்லது மாமனாருக்கு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளது.

ரத்தம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள், நோய்கள் தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. சிறுபிள்ளைகளால் நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். பிள்ளைகள் விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம் என அனைத்துவித நல்ல மாற்றங்களும், முன்னேற்றமும் ஏற்படும். விநாயகர் வழிபாடு ஏற்றத்தையும், மாற்றத்தையும் தரும்.

சிம்மம் ராசி பலன்

சிம்மம் ராசியினருக்கு பொருளாதாரத்தில் மிக முக்கியமான முன்னேற்றங்கள் ஏற்படும். பல் சிகிச்சை செய்வது, ஞானப்பல் பிரச்சனைகள் போன்ற பாதிப்புகள் வரும் அமைப்புள்ளது. பணத்தை கொடுதது சிக்கிக் கொள்வது, சண்டை போட்டு ஒரு காரியத்தை முடிப்பது என ஒரு மாதம் பிரச்சனைகள் இருக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியம், பேரக் குழந்தைகள், மருமகன், மருமகளின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனத்துடன் இருப்பது நல்லது.

யாரையும் நம்பி பணத்தைக் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. எந்த காரியத்தை செய்தாலும் அதனை 2 வாரத்துக்கு தள்ளிப்போடுவது நன்மை. 3, 4 ஆம் இடம் நன்றாக இருக்கிறது. லாப ஸ்தானம் அற்புதமாக இருக்கிறது. எல்லா விஷயங்களும் அற்புதமாக நடக்கும். திருமண யோகம் உண்டாகும். வாக்குறுதி கொடுப்பதை 15 நாட்களுக்குத் தவிர்ப்பது நல்லது.

வாக்கு ஸ்தானத்தில் சூரியன் இருப்பதால் உறவுகள், நட்புகளை காயப்படுத்தாமல் இருப்பது நன்மை பயக்கும். மகிழ்ச்சியுடன் இருப்பது மேன்மையைத் தரும். நிறைய நன்மைகள் நடக்கும். ரத்த பந்த உறவுகள், உறவினர்களால் நிறைய சிக்கல்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது. சூரியன் பார்வை சனிக்கு இருப்பதால் அஷ்டமசனியால் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படும். சனிக்கிழமை தோறும் விநாயகர் வழிபாடு, பெருமாள் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசியினருக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு, மேலதிகாரிகள் என எல்லா விஷயத்திலும் கவனம் தேவை. தர்க்கத்தை தவிர்ப்பது நல்லது. வீடியோ கால், போட்டோ ஷேர் செய்யும் விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. சிந்தனை, நியாபகம் எல்லாம் எங்கோ இருக்கும். அரசியல்வாதிகள் அதீத கவனமாக இருக்க வேண்டும்.

தலைவலி, ஒற்றை தலைவலி வரும் பாதிப்பு உள்ளது. சட்டத்திற்குப் புறம்பானவர்களின் நிழல் கூட படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கண் பாதிப்பு, படபடப்பு தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை. கண்ணாடி உடைவது, டென்ஷன், கோபப்படுவது போன்றவை இருக்கும். பிள்ளைகளால் பிரச்சனைகள் வரும். அப்பாவின் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளது.

மூத்த பிள்ளைக்கும், உங்களுக்கும் பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளது. அக்கவுண்ட்ஸில் பிழை வருவது, எலும்புகளில் பாதிப்பு வருவது, வாக்கு கொடுப்பதால் பிரச்சனை வருவது என வரும் 15 நாட்களுக்கு பல பிரச்சனைகள் வரும். எல்லா விஷயத்தையும் ஒரு மாதத்திற்கு தள்ளிப்போடுவது நல்லது. லாப ஸ்தானத்தில் குரு இருப்பதால் பெரிய பாதிப்புகள் வராது. பண வரவு நன்றாக இருக்கும். வியாழக்கிழமைகளில் விநாயகர், பெருமாள் வழிபாடு ஏற்றத்தைத் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+