வார ராசி பலன் (ஆகஸ்ட் 4–9): 12 ராசிகளுக்கும் அதிரடி பலன்கள்... யாருக்கு பண யோகம்?
Weekly Rasi Palan: ஆகஸ்ட் 4 முதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி (ஆடி 19 முதல் 24 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் கடக ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆடி மாதமாகும். ஜூலை 17 ஆம் தேதி ஆடி மாதம் பிறந்துள்ளது. அம்மனுக்கு உகந்த மாதமான இந்த ஆடி மாதத்தில் பல்வேறு முக்கய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், ஆகஸ்ட் 4 முதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி (ஆடி 19 முதல் 24 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
மேஷம் ராசி பலன்
மேஷ ராசியினருக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். இந்த வாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வெள்ளிக்கிழமையில் அம்பாள் வழிபாடு செய்வது நன்மையைத் தரும். கழுத்து, முதுகுப் பகுதிகளில் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால், தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது ஏற்றத்தைத் தரும்.
கணவன், மனைவிக்குள் சிறிய வாக்குவாதங்கள் கூட செய்யாமல் இருப்பது நல்லது. மேலதிகாரிகள் விஷயத்தில் இருந்து வந்த பதட்டங்கள் குறையும். மேலதிகாரிகளுக்கு உங்கள் மீது பயம் ஏற்படும் அளவுக்கு சந்தோஷமும், வெற்றியும் ஏற்படும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். அரசாங்க காரியங்களில் வெற்றி உண்டாகும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷப ராசியினருக்கு இந்த வாரத்தில் பதட்டம், டென்ஷன் போன்றவை எல்லாம் நீங்கும். நிம்மதி பெருமூச்சு விடும் காலமாக இருக்கும். சந்திரன் அமர்ந்துள்ளாதல் சிறு சிறு தொந்தரவுகள் வந்தாலும் பெரிய அளவில் எந்தவித பாதிப்பும் இருக்காது. புதன் 3 ஆம் இடத்திற்குச் சென்றுவிட்டதால் பள்ளி, கல்லூரி, நிறுவனங்களில் நடக்க வேண்டிய நிறைய வேலைகள் நடக்கும். பெரிய வாய்ப்புகள் வந்து சேரும்.
நினைத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். தைரியம் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி ஏற்படும். நல்ல முன்னேற்றங்கள் காணப்படும். முதலீடுகளில் லாபம் கிடைக்கும். 2, 3 தேதிகளில் வேலையில் சிறு சிறு அழுத்தம் இருக்கலாம்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசியினருக்கு தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதைத் தவிர்ப்பது நல்லது. பழைய கடன்களை அடைத்து முடிக்கும் நல்ல காலகட்டம். 6 ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கு விரயம் இந்த வாரம் அதிகளவில் காணப்படும். மன அழுத்தம் தீரும். ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட சிறு பாதிப்புகளையும் அலட்சியப்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அலர்ஜி தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள், ஏற்றங்கள் ஏற்படும். தொழில் நிமித்தமான அனுகூலங்கள் காணப்படும். மறைமுக எதிரிகளின் பிரச்சனை பரிபூரணமாக நிவர்த்தியாகும். பூர்வீகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும்.
கடகம் ராசி பலன்
கடக ராசியினருக்கு இந்த வாரம் ராஜயோகம் உண்டாகும். உங்கள் மூலமாக மற்றவர்களுக்கு நிறைய நன்மைகள் நடக்கும். சுபகாரியங்கள் அடுத்தடுத்து நடக்கும். நிறைய சொத்துகள் சேர்க்கை உண்டாகும். வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். நீட் தேர்ச்சி பெறும் யோகம் உண்டு. நினைத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டு.
திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். மனதில் சந்தோஷமும், திருப்தியும் உண்டாகும். கெளரவம் உங்களைத் தேடி வரும். சுக்கிரன் நீச்சம் பெற்றுள்ளதால் தொண்டை எரிச்சல், கழுத்து எரிச்சல், டான்சில் போன்றவை வருவதற்கான வாய்ப்புள்ளது. இருப்பினும், இந்த வாரத்தில் சிறிது கவனமாக இருப்பது நல்லது.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசியினருக்கு அருமையான காலகட்டம். எல்லா நல்ல விஷயங்களும் நடக்கக்கூடிய நேரம். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியங்களில் வெற்றி ஏற்படும். நிறைய பேருக்கு காதல் திருமணம் நடக்கும். லாப ஸ்தானத்தில் செவ்வாய் நல்ல நிலையில் உள்ளது. அண்ணன், நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பெரிய அளவில் உதவிகள் கிடைக்கும்.
வெளியூர், வெளிநாடு, வேறு ஊர், வேறு தேசம் செல்வதற்கான வாய்ப்பு ஏற்படும். நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை, ரத்த அழுத்தம் பாதிப்பு உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும். அப்பாவின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசியினருக்கு பெண்களின் உடல்நிலையில் கவனம் தேவை. சில்லென்ற உணவுப் பொருள்கள், இனிப்புகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. அடிவயிறு, கர்ப்பப்பை, கிட்னி தொடர்பான பாதிப்புகளை பார்த்துக் கொள்ள வேண்டும். தொழில் ஸ்தானம், லாப ஸ்தானத்தில் மிகப்பெரிய வெற்றி, மாற்றமும் உண்டாகும். நல்ல மாற்றங்களும், முன்னேற்றங்களும் ஏற்படும்.
சூரியன், புதன், குரு லாப ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது பெரிய அதிர்ஷ்டத்தைத் தரும். பெயர், புகழ், கெளரவம் ஏற்படும் நல்ல காலகட்டம். நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். குழந்தைகளுக்கு சீட் கிடைக்கும். நிம்மதியைப் பார்க்கக்கூடிய நேரம். மற்றவர்களின் உதவி இல்லாமல் நின்று ஜெயிக்கக்கூடிய காலகட்டம். முயற்சியை சரியாக செய்தால் எல்லா விஷயத்தில் வெற்றி பெறும் யோகம் உண்டு.
துலாம் ராசி பலன்
துலாம் ராசியினருக்கு செல்வாக்குகள் கூடும் அற்புதமான காலகட்டம். கொடுத்த வாக்கை குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் காப்பாற்றக் கூடிய யோகமான அமைப்பு. பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்து வந்த சங்கடங்கள் நீங்கும்.
தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நிறைய நன்மைகள் நடக்கும். இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம் என அனைத்து விதமான முன்னேற்றங்களும் ஏற்படும். உத்தியோகம் ரீதியாக எல்லா விஷயங்களிலும் நினைத்துப் பார்க்காத நிம்மதி உண்டாகும். இளம் வயதை சார்ந்தவர்களுக்கு பெரிய செல்வாக்கு, சந்தோஷம் ஏற்படும். பதவி உயர்வு ஏற்படும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசியினருக்கு உறவுகள் தொடர்பான விஷயங்களில் அனுகூலமும், சந்தோஷமும் ஏற்படும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் பரிபூரண நிவர்த்தியாகும். வியாபாரம், தொழில் ரீதியாக திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படும். புதிதாக அறிமுகமாகும் நபர்களால் குழப்பங்கள் ஏற்படும். உறவுகள் என்று சொல்லிக் கொண்டு உங்களைப் பற்றி புறமுதுகில் பேசுவார்கள்.
திங்கள்கிழமை தோறும் பசு மாடுகளுக்கு கோதுமை சம்பந்தப்பட்ட உணவு, வெல்லத்தை கலந்து கொடுப்பது, காய்கறிப்பது கொடுப்பது நன்மையைத் தரும். தான் உண்டு, தன் வேலை உண்டு என்று சுருங்கிக் கொள்வது நல்லது. தொழில், உத்தியோகம், வியாபாரம் ஏற்றத்தை ஏற்படுத்தும். துணை விஷயத்தில் வாக்குவாதம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசியினருக்கு மன அழுத்தம் கொள்ளாமல் இருப்பது நல்லது. உறவுகளை நினைத்து மனம் வேதனைப்படுவதைத் தவிர்ப்பது நல்லது. பதட்டமில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். விடுபட்ட தெய்வ வழிபாடுகளைச் செய்து மகிழ்வீர்கள். காது, மூக்கு, தொண்டை, சளி தொந்தரவு தொடர்பான பாதிப்புகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும்.
அனுகூலம்
இழுபறியாக இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். வியாபாரத்தில் காணப்பட்டிருந்த பிரச்சனைகள் நீங்கும். உத்தியோகம் ரீதியாக இருந்த சங்கடங்கள் தீரும். நரசிம்மர் வழிபாடு மன அழுத்தத்தை தீர்க்கும். உத்தியோகம் ரீதியாக, தொழில் ரீதியாக பெரும் அனுகூலத்தைப் பெற்றுத் தரும். தனிப்பட்ட முறையில் உங்களுடைய செல்வாக்கு கூடும். அசையும், அசையா பொருள் சேர்க்கை உண்டாகும். மேலதிகாரிகளுடன் தர்க்கம் வைத்துக் கொள்ளக் கூடாது.
மகர ராசி பலன்
மகர ராசியினருக்கு துணை விஷயத்தில் அதீத கவனமாக இருக்க வேண்டும். உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவது, மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. ஆண்களாக இருந்தால் பெண்கள் விஷயத்திலும், பெண்களாக இருந்தால் ஆண்கள் விஷயத்திலும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
லாபம் ஏற்படும்
லாபம், அனுகூலம் உண்டாகும். பண வரவுக்கான அமைப்பு ஏற்படும். தைரியம் உண்டாகும். உள்ளூர், வெளியூர் செல்லும் யோகம் உண்டாகும். வண்டி, வாகன
மாற்றங்கள் ஏற்படும். வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். எல்லா விஷயத்திலும் நம்பிக்கை ஏற்படும். நிறைய நல்ல காரியங்கள் அடுத்தடுத்து நடக்கும். ஏற்றமும், நம்பிக்கையும் உண்டாகும்.
கும்ப ராசி பலன்
கும்ப ராசியினருக்கு நிறைய வெற்றிகள் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். முன்னேற்றங்களும், வளர்ச்சியும் நிறைந்த காலகட்டமாக இருக்கும். பஞ்சம ஸ்தானத்தில் இருக்கும் செவ்வாய் ராஜயோகத்தைக் கொடுப்பார். வீடு கட்டுவது, நிலம் வாங்குவது, அப்பார்ட்மென்ட் வாங்குவது, கட்டுவது போன்ற யோகங்கள் உண்டாகும். அரசாங்க உத்தியோகம் கிடைக்கும். நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது, மெரிட்டில் கிளியர் செய்வது போன்ற அமைப்பு உள்ளது.
பொறுமை
நினைத்தவை எல்லாம் எளிமையாக நடக்கும் நல்ல காலகட்டம். நீங்கள் செய்யும் விஷயத்தில் கவனத்தை தாராளமாக செலுத்தலாம். உடம்பு சூடாவது, அம்மை போடுவது போன்றவை ஏற்படும். முக்கியமான வாய்ப்புகள் வந்து சேரும். மற்றபடி எல்லா விஷயங்களிலும் ஏற்றம் பெறக்கூடிய காலகட்டமாக இருக்கும். பொறுமையாக செயல்படுவது நல்லது.
மீனம் ராசி பலன்
மீன ராசியினருக்கு யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய காலகட்டம். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட ஏற்றங்களும், அனுகூலமும் உண்டாகும். பெரும் வெற்றியும், சந்தோஷமும் ஏற்படக்கூடிய காலகட்டம். இழுபறியாக இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும்.
பிள்ளைகள் விஷயத்தில் கோபத்தை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் தேவையில்லாத குழப்பம் மற்றவர்களால் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் கவனம் தேவை. அலர்ஜி, ஜாயிண்டுகளில் வலி, விட்டமின் குறைபாடு, கால்சியம் குறைபாடு போன்றவை வருவதற்கான வாய்ப்புள்ளது. ஹார்மோன் குறைபாடுகள் பெண்களுக்கு ஏற்படும் அமைப்புள்ளது.


Click it and Unblock the Notifications
