Dhanusu: திடீர் அதிர்ஷ்டம் பெறும் தனுசு ராசி.. கோபத்தை மட்டும் கட்டுப்படுத்துங்க பாஸ்
வார ராசி பலன்: நவம்பர் 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 30 ஆம் தேதி முதல் கார்த்திகை 6 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் தனுசு ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

கார்த்திகை மாதம் இந்த வாரம் பிறக்கவுள்ளது. விருச்சிக ராசியில் சூரியன் வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதமாகும். விருச்சிகம் என்பது செவ்வாய் வீடு. பகை வீட்டில் சூரியன் இருக்கிறார். பெரிய தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள், இசைக் கலைஞர்கள் எல்லோரும் இந்த மாதத்தில் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். பல்வேறு முக்கிய கிரக மாற்றங்கள் நிகழ்ந்துள்ள நிலையில், நவம்பர் 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 30 ஆம் தேதி முதல் கார்த்திகை 6 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி, லக்கினம் சார்ந்த நபர்களுக்கு குடும்பத்தில் கோபத்தைத் தவிர்ப்பது நன்மை பயக்கும். துணை உங்களுக்காகவே வாழ்பவர்கள் என்பதால் அவர்களிடம் கோபப்படுவதைத் தவிர்ப்பது நல்லது. அவர்களைப் பற்றி யார் என்ன சொன்னாலும் கோபப்படுவது, மற்றவர்களிடத்தில் சொல்வதைத் தவிர்ப்பது நல்லது. வேலைக்காரர்கள் விஷயத்தில் விட்டுக் கொடுத்துச் செல்வது நன்மை பயக்கும்.
திடீர் அதிர்ஷ்டம்
பிள்ளைகளின் படிப்பு, தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். பிள்ளைகளின் நீண்ட நாள் கனவுகளுக்கு துணை நின்று செய்து முடிப்பீர்கள். சுபகாரியத்தை அடுத்தடுத்து முடிப்பீர்கள். குருவின் பார்வை இருப்பதால் தெய்வமார்க்க பயணங்கள் ஏற்படும். தெய்வ தரிசனங்கள் ஏற்படும். ஞானங்கள் கிடைக்கும்.
பாக்கியம்
கோயில்களுக்கு அரசி, பருப்பு வாங்கிக் கொடுக்கக்கூடிய பாக்கியம் ஏற்படும். விடுபட்ட தெய்வ வழிபாடுகளைச் செய்து முடிக்கும் அமைப்பு உண்டு. யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய காலகட்டம். உறவுகளுக்குள் இருந்த சிக்கல்கள் தீரும். பெற்றோர், பெரியோருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். முட்டி வலிகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
வழிபாடு
அர்த்தாஷ்டம சனி இருப்பதால் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்வது நன்மையைத் தரும். தொழில், உத்தியோகம் அற்புதமாக இருக்கும். சுப காரியங்கள் நடக்கும். அசையும் அசையா பொருள்கள் சேர்க்கை ஏற்படும். வீட்டுக்குத் தேவையான பொருள்களை சேர்ப்பீர்கள். பெருமாள் வழிபாடு செய்வது சகலவித நன்மைகளையும் தரும். ரத்த அழுத்தம், சர்க்கரை தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை. மன வருத்தங்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டாம்.


Click it and Unblock the Notifications
