“காசு மேல காசு வந்து கொட்டுதே”.. தனுசு ராசிக்கு அதிர்ஷ்டம் அள்ளும் வாரம்
Rasi palan this week: செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் அக்டோபர் 4 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 12 முதல் 17 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் தனுசு ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

ஆவணி மாதம் நிறைவடைந்து புரட்டாசி மாதம் ஆரம்பித்துள்ளது. புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதமாகும். சிம்மத்தில் இருக்கும் சூரிய பகவான் கன்னி ராசிக்கு வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம், கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. மஹாளய அமாவாசை அக்டோபர் 10 ஆம் தேதி வருகிறது. இந்த நாளில் ஏழைகளுக்கு உணவு தானமாக அளிப்பது, அரிசி பருப்பு வாங்கி கோயிலுக்கு கொடுப்பது நன்மை பயக்கும்.
இதைத்தொடர்ந்து, அக்டோபர் 11 ஆம் தேதி நவராத்திரி ஆரம்பிக்கிறது. அந்த வகையில், செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் அக்டோபர் 4 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 12 முதல் 17 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசியினருக்கு லாபம் அதிகரிக்கக்கூடிய காலகட்டம். பண வரவு அற்புதமாக இருக்கும். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நம்பிக்கையான விஷயங்கள் நடக்கும். அலுவலகம் ரீதியான பிரச்சனைகள், கால் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளது. நண்பர்களால் பெரிய அளவில் சந்தோஷம், ஆதாயம் ஏற்படும். பொறுப்புகள் அதிகரிக்கும்.
லாபம் கொட்டும்
அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், குருவும் இணைந்திருப்பதால் பெண்களுக்கு ஆண்களால் தொந்தரவுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. எதிர்மறையான எந்தவொரு விஷயங்களும் நடைபெறாது. லாபத்தில் அற்புதமான கிரகங்கள் அமர்ந்திருப்பதால் பணம் வந்து கொண்டே இருக்கும். பரிசுகள் வந்து சேரும். பதவி உயர்வு, சலுகை கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். பிடித்த விஷயங்களை செய்து மகிழ்வீர்கள்.
சுபச்செலவு
யோக பலன்களை அதிகமாகப் பெறக்கூடிய அமைப்பு. பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பது நல்லது. பிள்ளைகளின் சுபச் செலவுகளுக்கான பணங்கள் வந்து சேரும். உறவுகளுக்குள் இருந்து வந்த சிக்கல்கள் பரிபூரண நிவர்த்தியாகும். வசந்தங்கள் வரக்கூடிய அமைப்பு. தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் நல்ல மாற்றங்கள், முன்னேற்றங்களும் ஏற்படும்.
முன்னேற்றண்
இதுவரை இருந்து வந்த சிக்கல்கள் பரிபூரணமாக நீங்கும். பூமி சம்பந்தப்பட்ட விஷயத்தில் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தும். உத்தியோகம், தொழில், வியாபாரம், படிப்பு ரீதியாக நிறைய அனுபவங்கள், சந்தோஷங்கள் உண்டாகும். மனதிற்குப் பிடித்த கோயில்களுக்குச் சென்று வருவீர்கள். எதிரிகள் விஷயத்தில் இருந்து வந்த மனக் கஷ்டங்கள் பரிபூரணமாக நீங்கும்.
வழிபாடு
பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். இதுவரை இருந்து வந்த சிக்கல்கள் நீங்கி மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய காலகட்டம். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 90 சதவீதம் அற்புதமாக இருக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு சகலவித முன்னேற்றங்களையும் ஏற்படுத்தும்.


Click it and Unblock the Notifications
