Rasi Palan This Week: கடக ராசிக்கு 7 நாட்களில் வரும் குட்நியூஸ்.. வெளிநாடு செல்லும் யோகம்
Weekly Rasi Palan: ஆகஸ்ட் 10 முதல் ஆகஸ்ட் 16 ஆம் தேதி (ஆடி 25 முதல் 31 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் கடக ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் கடக ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆடி மாதமாகும். ஜூலை 17 ஆம் தேதி ஆடி மாதம் பிறந்துள்ளது. அம்மனுக்கு உகந்த மாதமான இந்த ஆடி மாதத்தில் பல்வேறு முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், ஆகஸ்ட் 10 முதல் ஆகஸ்ட் 16 ஆம் தேதி (ஆடி 25 முதல் 31 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் கடக ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
கடகம் ராசி பலன்
கடக ராசியினருக்கு அற்புதமான வாரமாக இந்த வாரம் அமையும். எல்லா விஷயங்களும் பாசிட்டிவாக நடக்கும். அரசாங்க உத்தியோகம் கிடைக்கும். நிறைய பிரச்சனைகளில் இருந்து வெளியில் வருவீர்கள். எதிர்பாராத நல்ல விஷயங்கள் நடக்கும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். எதிர்பாராத நல்ல விஷயங்கள் நடக்கும்.
கடன் தீரும்
மரியாதை தானாக கிடைக்கும். வீட்டில் நல்ல காரியங்கள் நடக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்கு பயணம் செல்லும் யோகம் உண்டாகும். மதிப்புக்குரிய அனைத்து விஷயங்களும் நடக்கும். பழைய கடன்களை அடைக்கும் யோகம் உண்டாகும். வாழ்க்கையில் பெரிய சாதனைகளை செய்யக்கூடிய அமைப்பு உண்டாகும். ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
அனுகூலம்
நினைத்து பார்க்க முடியாத நன்மைகளும், சந்தோஷங்களும் உண்டாகும். மேலதிகாரிகள் விஷயத்தில் கவனம் தேவை. எதிரிகள் விஷயத்தில் கவனம் தேவை. தனிப்பட்ட செல்வாக்குகள் கூடும். பிள்ளைகள், துணை விஷயத்தில் ஏற்றம் ஏற்படும். பெற்றோர்களுடன் இருந்து வந்த மன தாங்கல்கள் தீரும். யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய காலகட்டம்.
கவனம்
மேலதிகாரிகள், சட்டத்திற்குப் புறம்பான விஷயங்கள், கிரெடிட் கார்டு தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. சனி வக்ர கதியாக இருப்பதால் ஆண்கள் பெண்கள் விஷயத்திலும், பெண்கள் ஆண்கள் விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். நரம்பு, கழுத்து, கால் பாதம் தொடர்பான பாதிப்புகளில் கவனம் தேவை. இளைய சகோதரன், சகோதரி வழியில் இருந்து வந்த வாக்குவாதங்கள் தீரும்.
வழிபாடு
பேச்சுவார்த்தையில் கவனம் தேவை. சொத்தை பற்களை எடுப்பீர்கள். கண் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் வந்து நிவர்த்தியாகும். பணம், பொருளாதாரம், அரசு வேலை, அரசாங்கம் சார்ந்த விஷயங்களில் ஏற்றம் உண்டாகும். அப்பா, அம்மா மூலமாக வந்து சேர வேண்டிய பண பாக்கியங்கள் வந்து சேரும். சந்தோஷ 80 சதவீதமும், பொருளாதார ஏற்றம் 100 சதவீதமும் நன்றாக இருக்கும். குருவாயூர் கிருஷ்ணர், விநாயகர், சனி பகவான் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். ஸ்தோத்திரங்களைக் கேட்பது நன்மையைத் தரும்.


Click it and Unblock the Notifications
