கடக ராசிக்கு சொந்த வீடு, நிலம், நகை வாங்கும் யோகம்.. பண வரவு கொட்டும்
Rasi palan this week: செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையிலான (ஆவணி 28 முதல் புரட்டாசி 3) காலகட்டத்தில் கடகம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

இந்த வாரத்தில் ஆவணி மாதம் நிறைவடைந்து புரட்டாசி மாதம் ஆரம்பிக்கவுள்ளது. புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதமாகும். சிம்மத்தில் இருக்கும் சூரிய பகவான் கன்னி ராசிக்கு வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம், கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் செப்டம்பர் 27 ஆம் தேதி மஹாளயபட்சம் ஆரம்பிக்கிறது. மஹாளய அமாவாசை அக்டோபர் 10 ஆம் தேதி வருகிறது. இந்த நாளில் ஏழைகளுக்கு உணவு தானமாக அளிப்பது, அரிசி பருப்பு வாங்கி கோயிலுக்கு கொடுப்பது நன்மை பயக்கும்.
இதைத்தொடர்ந்து, அக்டோபர் 11 ஆம் தேதி நவராத்திரி ஆரம்பிக்கிறது. அந்த வகையில், செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையிலான (ஆவணி 28 முதல் புரட்டாசி 3) காலகட்டத்தில் கடக ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
கடகம் ராசி பலன்
கடகம் ராசியினருக்கு பணம், பொருளாதாரம் தொடர்பான விஷயத்தில் நல்ல ஏற்றம் ஏற்படும். திடீரென திட்டமிடும் காரியங்களில் வெற்றி பெறும் யோகம் ஏற்படும். வீடு, சொத்து அமையும். நிறைய நகைகள் வாங்கும் அமைப்பு உள்ளது. பெண்களுக்கு அதிர்ஷ்டம் ஏற்படும். செப்டம்பர் 16, 17 ஆம் தேதி நிறைய நல்ல விஷயங்கள் நிறைய நடைபெறும்.
கவனம்
கழுத்து சம்பந்தப்பட்ட பாதிப்புகள் வரும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. சிலருக்கு தொண்டை வலி, பின்புறப் பகுதி, தோள்பட்டை வலி வரும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. வண்டி, வாகனங்களில் ஆவணங்களை சரிபார்க்காமல் சென்று போலீஸிடம் சிக்கும் வாய்ப்புள்ளது. கோபம் அதிகரிக்கும். செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் அமைதியைக் கடைப்பிடிப்பது நல்லது மாமனாருக்கு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளது.
முன்னேற்றம்
ரத்தம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள், நோய்கள் தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. சபிள்ளைகளால் நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். பிள்ளைகள் விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம் என அனைத்துவித நல்ல மாற்றங்களும், முன்னேற்றமும் ஏற்படும்.
பொறுப்புகள்
அரசாங்கத்தில் கெளரவம் ஏற்படும். எதிரிகள் விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். செவ்வாய் நீசமாக இருப்பதால் அபிராமி அந்தாதியைப் படிப்பது நன்மையைத் தரும். தொழிலில் பெரிய பொறுப்புகள் கிடைக்கும். தொழிலில் சறுக்கல் வரும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. உடன் வேலை செய்பவர்கள், கூட்டாளிகள் விஷயத்தில் கவனம் தேவை.
வழிபாடு
பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மனம் சந்தோஷம் பெருகும். செவ்வாய்க்கிழமை தோறும் விநாயகர் வழிபாடு, வீட்டிற்கு அருகே உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்வது ஏற்றத்தையும், மாற்றத்தையும் தரும். தம்பியின் ஆரோக்கியம், வாழ்க்கையில் நிறைய சிக்கல்கள் வரும் வாய்ப்புள்ளது. சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 80 சதவீதம் நன்றாக இருக்கும்.


Click it and Unblock the Notifications
