கன்னி ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. 7 நாட்கள் ரொம்ப கவனம்

Subscribe to Oneindia Tamil

Rasi palan this week: அக்டோபர் 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 18 முதல் 24 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் கன்னி ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

rasi-palan-this-week-what-kind-of-benefits-will-get-kanni-people-from-oct-5-to-11

புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதமாகும். சிம்மத்தில் இருக்கும் சூரிய பகவான் கன்னி ராசிக்கு வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம், கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. பெண்களை பெருமைப்படுத்தக் கூடிய நவராத்திரி வரக்கூடிய அற்புதமான மாதம். அக்டோபர் 11 ஆம் தேதி நவராத்திரி ஆரம்பிக்கிறது. நவராத்திரி 9 தினங்களில் தேவிகளை வழிபாடு செய்வது ஏராளமான நன்மைகளைத் தரும்.

அந்த வகையில், அக்டோபர் 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 18 முதல் 24 ஆம் தேதி) வரையிலான காலகட்டத்தில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசியினர் தூக்கத்தை கெடுத்துக் கொள்ளக் கூடாது. சூரியன் ராசியிலேயே இருப்பதால் குடும்பம், தொழிலில் கவனமாக இருக்க வேண்டும். வண்டி, வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. சட்டத்திற்குப் புறம்பானவர்களின் தொடர்பில்லாமல் பார்த்துக் கொள்வது நன்மை பயக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு ரீதியாக என எல்லா விஷயங்களிலும் கவனமாக இருப்பது நல்லது.

சிக்கல் நேரிடும்

இழுபறியாக இருக்கும் விஷயங்களால் கோபம் ஏற்படும். உஷாராக இருக்க வேண்டிய காலகட்டம். நீங்கள் உண்டு, உங்கள் வேலை உண்டு என இருப்பது நல்லது. இல்லையெனில் சிக்கல்களை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் திட்டமிட்டு ஒன்றை செய்வீர்கள். அவை வேறு விதமாக நடக்கும். அதனால், கவனமாக இருக்க வேண்டும்.

பண வரவு

புதிய முயற்சிகள் தள்ளிப்போய் நடக்கும். நாம் எடுக்கும் முயற்சிகளில் ஒரு சில விஷயங்கள் நமக்கு சாதகமாக முடியும். பணம், காசில் பஞ்சமே இருக்காது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். லாப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் செவ்வாய், குரு பலமாக இருக்கிறது. அங்கு சந்திரன் செல்கிறது. மூத்தவர்கள், அண்ணன், தம்பி, இடமாற்றம், பொருளாதாரம், நிலம் சார்ந்த விஷயங்களில் 90 சதவீதம கண்டிப்பாக நல்லபடியாக முடியும்.

வழிபாடு

பண வரவு அற்புதமாக இருக்கும. குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். குடும்ப ஒற்றுமை ஓங்கும். சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. அமோகமான காலகட்டமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும். தலையில் நீர்கோர்க்கும் கவனம் தேவை. சிவபெருமான் வழிபாடு நன்மையைத் தரும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 75 சதவீதம் அற்புதமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+