கோடீஸ்வர யோகம் பெறும் கன்னி ராசி.. நினைத்து பார்க்காத அதிர்ஷ்டம் தேடி வரும்

Subscribe to Oneindia Tamil

Weekly Rasi Palan: ஆகஸ்ட் 10 முதல் ஆகஸ்ட் 16 ஆம் தேதி (ஆடி 25 முதல் 31 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

rasi-palan-this-week-what-kind-of-benefits-will-get-kanni-rasi-august-10-to-16

சூரிய பகவான் கடக ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆடி மாதமாகும். ஜூலை 17 ஆம் தேதி ஆடி மாதம் பிறந்துள்ளது. அம்மனுக்கு உகந்த மாதமான இந்த ஆடி மாதத்தில் பல்வேறு முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், ஆகஸ்ட் 10 முதல் ஆகஸ்ட் 16 ஆம் தேதி (ஆடி 25 முதல் 31 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசியினருக்கு யோக பலன்களை அதிகமாகப் பெறக்கூடிய காலகட்டம். லாபம், அனுகூலம், மகிழ்ச்சி ஏற்படும் காலகட்டம். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். பிள்ளைகள் விஷயத்தில் ஏற்றம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். திருமண யோகம் உண்டாகும். காதல் அமைப்பு கைகூடும்.

சிக்கல் தீரும்

உங்கள் காதலுக்கு பெற்றோர்கள் சம்மதிக்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் நல்ல மாற்றங்களும், வளர்ச்சியும் ஏற்படும். பதவி உயர்வு கிடைக்கும். எதிர்பார்க்காத நன்மைகள் உண்டாகும். உத்தியோகம், தொழில், வியாபாரம், படிப்பு என அனைத்து விஷயத்திலும் ஏற்றம் உண்டாகும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் தீரும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும்.

நல்ல மாற்றங்கள்

இடமாற்றம், உத்தியோக மாற்றம், தொழில் மாற்றம், வியாபார மாற்றம் அனைத்து விதமான மாற்றம் உண்டாகும். பிள்ளைகள் விஷயத்தில் இருந்து வந்த கஷ்டங்கள் தீரும். நீண்டநாட்களாக இருந்து வந்த சிக்கல்கள் தீரும். நினைத்து பார்க்காத நன்மைகள் நடக்கும் காலகட்டம். கூட்டுத் தொழிலில் இருந்து தனியாக தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும்.

முன்னேற்றம்

பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீடு, தொழில், வண்டி வாகனம், சொத்துகள் கிடைக்கும் யோகம் உண்டாகும். நல்ல வரன்கள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். மனதில் சந்தோஷம் அதிகரிக்கும். குடும்பம் அமையும். வேலையில் இருந்து வந்த குடைச்சல்கள், டென்ஷன்கள் தீரும். லாப ஸ்தானத்தில் 3 கிரகங்கள் அணிவகுத்து இருப்பதால் பதவிகள், புகழ் தேடி வரும்.

வழிபாடு

வாரத்தின் இறுதிப் பகுதியில் பின்பக்க வலி, கால் பாதம், குதிகால் வலி போன்றவை வருவதற்கான வாய்ப்புள்ளது. விட்டமின், மக்னீசியம் சத்துகல் குறைவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 90 சதவீதம் நன்றாக இருக்கும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நன்மைகள் உண்டாகும். பூமி சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஏற்றம் ஏற்படும். விநாயகர் வழிபாடு, குரு வழிபாடு ஏற்றத்தைத் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+