Rasi palan this week: கண்ணா 2 லட்டு தின்ன ஆசையா.. கன்னி ராசிக்கு பொற்காலம் ஆரம்பம்
Rasi palan this week: செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரையிலான (ஆவணி 21 முதல் 27) காலகட்டத்தில் கன்னி ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் சிம்ம ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆவணி மாதமாகும். சூரியன் தனது சொந்த ராசியில் வந்து அமர்வதால் மிகவும் வலுவாக காணப்படுவார். ரத்த அழுத்தம், வெர்டிகோ உள்ளவர்கள் இந்த மாதத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில், செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரையிலான (ஆவணி 21 முதல் 27) காலகட்டத்தில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசியினருக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்றம் ஏற்படும். பிள்ளைகள் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அனுகூலம் காணப்படும். விலை உயர்ந்த பொருள்கள் விஷயத்தில் அதீத கவனமாக இருக்க வேண்டும். உறவுகளுக்குள் கோபத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. எல்லா வகையான முன்னேற்றங்களும் கிடைக்கும். தேவையற்ற மன அழுத்தம் வருவதற்கான வாய்ப்புள்ளது.
நகை வாங்கும் யோகம்
நிறைய பேருக்கு எல்லா விஷயங்களையும் இரண்டு முறை, 3 முறை முயற்சிக்க வேண்யதிருக்கும். நோட்டீஸ், மெமோ வந்தாலும் அவை உங்களுக்கு சாதகமாக இருக்கும். நிலம், இடம், வீடு வாங்கும் யோகம் உண்டாகும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். நகை வாங்கும் யோகம் உண்டாகும். புதிய கடன்களை வாங்குவதற்கான வாய்ப்புள்ளது.
முன்னேற்றம்
பொருளாதாரத்தில் அற்புதமான முன்னேற்றங்கள் ஏற்படும். பண வரவு நன்றாக இருக்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். பணத்திற்குப் பஞ்சம் இருக்காது. சந்தோஷத்திற்கு குறைவு இருக்காது. ஆம்பரமான விஷயங்களை செய்வீர்கள். தென் மாவட்ங்களில் பள்ளி, கல்லூரி, கல்வி நிறுவனங்கள், நூலகம், வெங்கடேஷ், ராம் என்ற பெர் கொண்டவர்களுக்கு பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. திருப்பதியில் டேட்டா, ஆவணங்கள் தொடர்பான பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
ஆரோக்கியம்
விட்டமின் குறைபாடு, கேல்சியம் குறைபாடு போன்றவை வருவதற்கான வாய்ப்புள்ளது. பரம்பரையாக வரும் நோய்களில் கவனம் தேவை. அலர்ஜி, ஒவ்வாமை, சளி தொந்தரவு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. மகாலட்சுமி வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். ஞாயிற்றுக்கிழமை தோறும் மதிய வேளைகளில் உணவு தானமாகக் கொடுப்பது நன்மையைத் தரும்.
வழிபாடு
ஸ்ரீ கிருஷ்ணர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். தலைக்கு போடும் எண்ணெய், டை போன்றவற்றை மாற்றமால் இருப்பது நல்லது. இல்லையெனில் சொட்டை விழுவது, தோல் பிரச்சனைகள் வருவது போன்றவை ஏற்படும். பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 80 சதவீதம் நன்றாக இருக்கும்.


Click it and Unblock the Notifications
