Kumbam: கும்ப ராசிக்கு சொந்த வீடு வாங்கும் யோகம்.. பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி
Weekly Rasi Palan: ஆகஸ்ட் 10 முதல் ஆகஸ்ட் 16 ஆம் தேதி (ஆடி 25 முதல் 31 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் கும்பம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் கடக ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆடி மாதமாகும். ஜூலை 17 ஆம் தேதி ஆடி மாதம் பிறந்துள்ளது. அம்மனுக்கு உகந்த மாதமான இந்த ஆடி மாதத்தில் பல்வேறு முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், ஆகஸ்ட் 10 முதல் ஆகஸ்ட் 16 ஆம் தேதி (ஆடி 25 முதல் 31 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் கும்பம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
கும்பம் ராசி பலன்
கும்பம் ராசியினருக்கு நிறைய பிரச்சனைகள், சண்டைகள் ஓயும். வீடு, வண்டி, வாகனம், அப்பார்ட்மென்ட் வாங்கும் யோகம் உண்டு. கடன் கிடைக்கும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். வலிமையாக உழைக்கத் தொடங்குவீர்கள். அடுத்த வாரத்தில் இருந்து உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும் சூரியன் 7 ஆம் இடத்தில் இருப்பதால் கஷ்டங்களில் இருந்து வெளியில் வருவீர்கள்.
ஆரோக்கியம்
குடும்ப ஸ்தானத்தில் சனி வக்கிரமாக இருப்பதால் புதிய உறுப்பினர் வீட்டில் வந்து சேரும் யோகம் உண்டாகும். குழந்தை பாக்கியம் உண்டாகும். மருமகள், மருமகன் வரும் அமைப்பு உள்ளது. பெரியப்பா, சித்தப்பாவின் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் வரும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. கழுத்து, இருதயம், ரத்த சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளது.
ஏற்றம் நிறைந்த வாரம்
குடும்பத்திலும், சமுதாயத்தில் நீங்கள் கொடுத்த வாக்குகளை காப்பாற்றக்கூடிய யோகம் உண்டாகும். வயதில் முதிர்ந்தவர்கள் ஆரோக்கியத்தில் இந்த வாரம் கண்டிப்பாக கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத பழி சொல்லுக்கு ஆளாவது, சட்ட சிக்கலில் சிக்கும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. இளம் வயதினருக்கு உத்தியோகம், வியாபாரம், தொழில், படிப்பு தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும்.
அனுகூலம்
எல்லா விஷயங்களிலும் அனுகூலங்கள் ஏற்படுவதற்கான யோகம் உண்டாகும். யோக பலத்தை அதிகளவில் பெறக்கூடிய நல்ல காலகட்டம். மறைமுக நோய் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. பிள்ளகைளின் ஆரோக்கியம், பழக்கவழக்கத்தில், உத்திோயகத்தில் குழப்பங்கள் வரும் என்பதால் கவனம் தேவை. விநாயகரையும், சூரியனையும் வழிபாடு செய்வது நன்மையைத் தரும்.
வழிபாடு
பொருளாதாரத்தில் நல்ல முன்நேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும் யோகம் உண்டாகும். வண்டி வாகனங்களில் கவனமாக செல்வது நல்லது. சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 85 சதவீதம் நன்றாக இருக்கிறது. ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.


Click it and Unblock the Notifications
