கும்ப ராசிக்கு இந்த வாரம் முக்கிய திருப்பம்.. முன்னேற்றம் வரும்.. ஆனால் உஷார்
Rasi palan this week: செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையிலான (ஆவணி 28 முதல் புரட்டாசி 3) காலகட்டத்தில் கும்பம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

இந்த வாரத்தில் ஆவணி மாதம் நிறைவடைந்து புரட்டாசி மாதம் ஆரம்பிக்கவுள்ளது. புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதமாகும். சிம்மத்தில் இருக்கும் சூரிய பகவான் கன்னி ராசிக்கு வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம், கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் செப்டம்பர் 27 ஆம் தேதி மஹாளயபட்சம் ஆரம்பிக்கிறது. மஹாளய அமாவாசை அக்டோபர் 10 ஆம் தேதி வருகிறது. இந்த நாளில் ஏழைகளுக்கு உணவு தானமாக அளிப்பது, அரிசி பருப்பு வாங்கி கோயிலுக்கு கொடுப்பது நன்மை பயக்கும்.
இதைத்தொடர்ந்து, அக்டோபர் 11 ஆம் தேதி நவராத்திரி ஆரம்பிக்கிறது. அந்த வகையில், செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையிலான (ஆவணி 28 முதல் புரட்டாசி 3) காலகட்டத்தில் கும்ப ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
கும்பம் ராசி பலன்
கும்பம் ராசியினருக்கு உறவுகளுக்குள் இருந்த அனைத்து சிக்கல்களும் தீரும். குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். மேலதிகாரிகள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். எதிரிகளை சாதாரணமாக எண்ணுவது வருத்தத்தைத் தரும். நண்பர்கள் உங்களை உசுப்பேற்றும் வாய்ப்புள்ளதால் அதீத கவனம் தேவை. மற்றவர்கள் யாரையாவது பற்றி குறை சொன்னால் அந்த இடத்தில் இருந்து நகர்ந்து கொள்வது நல்லது.
கவனம்
அரசுத் துறை, அரசாங்க உத்தியோகத்தில் இருப்பவர்கள், அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருப்பவர்களுக்கு நன்மை ஏற்படும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் ஏற்றம் தரும். முடிந்த அளவுக்கு தானங்கள் அளிப்பது நல்லது. புரட்டாசி மாதம் முழுவதும் அசைவத்தை கடைப்பிடிப்பது நல்லது. அல்லது புதன்கிழமைகளில் அசைவத்தை தவிர்ப்பது நல்லது.
ஆரோக்கியம்
அஷ்மத்தில் கிரகங்கள் இணைகின்றன. சூரியன் 18 ஆம் தேதி புதனுடன் சேர்ந்து புதாதித்ய யோகம் உருவாகிறது. ஆனால், இதனால் உங்களுக்குப் பெரிய பயனைத் தராது. நிறைய பிரச்சனைகள் ஏற்படுத்தும். ஆரோக்கியத்தில் பாதிப்புகள் வந்து சேரும். வீட்டில் யாரோ ஒருவருக்கு மெடிக்கல் சார்ந்த பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கும். உடல் சூடி இருந்து கொண்டே இருக்கும்.
எச்சரிக்கை
வண்டி, வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. அரசு வங்கிகளில் பணம் போட்டிருப்பவர்கள் கவனத்துடன் இருப்பது நல்லது. வாக்குறுதி கொடுக்காமல் இருப்பது நன்மை பயக்கும். பெரியவர்களுக்கு உங்களுக்கு சண்டைகள், பஞ்சாயத்துகள் வரும் வாய்ப்புள்ளது. நல்ல ஓய்வு எடுக்க வேண்டும் என்று தோன்றும். அரசு, அரசியல் சார்ந்த விஷயங்களில் இருப்பவர்களுக்கு வேலை பறிபோகும்.
முன்னேற்றம்
பதவிகள் பறிபோவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. லஞ்சம் வாங்கியிருந்தால் அவை இப்போது வெளிச்சத்திற்கு வரும். உங்களைப் பற்றி வெளியில் தப்பாக பேசுவதற்கான வாய்ப்பு ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. பொருளாதாரத்தில் திடீர் மாற்றங்கள், முன்னேற்றங்கள் ஏற்படும். நிறைய பொறுப்புகள் வரும். அவை சுமையாக மாறுவதற்கான வாய்ப்புள்ளது.
வழிபாடு
மயக்கம், தலைசுற்றல், நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள், வண்டி, வாகனங்களில் செல்லும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். புதன்கிழமையில் பெருமாள் தாயாரை வழிபாடு செய்வது நன்மை பயக்கும். அனுமன் சாலிஷா, விஷ்ணு சஹஸ்ஹர நாமம் படிப்பது ஏற்றத்தைத் தரும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 75 சதவீதம் நன்மையைத் தரும். கால பைரவரை வழிபாடு செய்வது நன்மையை ஏற்படுத்தும்.


Click it and Unblock the Notifications
