திடீர் அதிர்ஷ்டம் பெறும் கும்ப ராசி.. ஜூலை 13 - 19 இல் வரப்போகும் சூப்பர் மாற்றம்

Subscribe to Oneindia Tamil

Rasi Palan This Week: ஜூலை 13 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி (ஆனி 29 முதல் ஆடி 3 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் கும்ப ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிடக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

rasi-palan-this-week-what-kind-of-benefits-will-get-kumbam-rasi-people-in-this-week

சூரிய பகவான் கடக ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆடி மாதமாகும். ஜூலை 27 ஆம் தேதி ஆடி மாதம் பிறக்கப் போகிறது. அம்மனுக்கு உகந்த மாதமான இந்த ஆடி மாதத்தில் பல்வேறு முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், ஜூலை 13 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி (ஆனி 29 முதல் ஆடி 3 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் கும்ப ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

கும்பம்

கும்ப ராசி, விருச்சிகம் லக்னத்திற்கு ஆரோக்கியத்தில் அதீத கவனமாக இருக்க வேண்டும். உடற்பயிற்சி உங்களுக்கு அற்புதத்தை ஏற்படுத்தம். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். அடுத்தடுத்து நல்ல விஷயங்கள் நடக்கும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை ஏற்படும். புதிய தொழில் தொடங்குவதற்கான யோகம் உண்டாகும்.

திடீர் அதிர்ஷ்டம்

கெளரவம் ஏற்படும். நல்ல வியாபாரங்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். வெளியூர், வெளிநாடு, கடல் கடந்து எல்லா விஷயங்களிலும் ஏற்றங்கள் ஏற்படும். திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படும். புதிய பொறுப்புகளும், அனுகூலமும் காணப்படும். கும்ப ராசியினருக்கு 14 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் உண்டாகும். திடீர் அதிர்ஷ்டம், திடீர் யோகம் உண்டாகும்.

முன்னேற்றம்

தொழில் ரீதியாக, உத்தியோகம் ரீதியாக ஏற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் இருந்து வந்த கஷ்டங்கள் தீரும். ஆச்சரியப்படும் அளவுக்கு முன்னேற்றங்கள் காணப்படும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். இழந்த பெருமைகளை பெறக்கூடிய காலகட்டம். எதிரிகளை அசாரதாரணமாக எடை போட்டால் பெரிய சிக்கல்களில் சிக்கும் வாய்ப்பு ஏற்படும். உறவுகளுக்குள் இருந்து வந்த சிக்கல்கள் பரிபூரணமாக நீங்கும்.

கவனம்

முக்கியமான ஒரு வாரமாக இந்த வாரம் அமையும். அம்மாவின் ஆரோக்கியம், உங்களுக்கு நெஞ்சுப் பகுதி, பின்பகுதி போன்றவற்றை பார்த்துக் கொள்வது நல்லது. சூரியன், குரு அமர்ந்திருப்பதால் நிறைய விஷயங்கள் தடை, தாமதத்துடன் நடக்கும் வாய்ப்புள்ளது. மற்றபடி எல்லா விஷயங்களும் நல்லபடியாக நடக்கும். 7 ஆம் இடத்தில் இருக்கும் சந்திரன், கேது, சுக்கிரன் இருப்பதால் கணவன், மனைவி, பிள்ளைகளின் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது.

வேலைவாய்ப்பு

பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பெரிய பாதிப்புகள் எதுவும் இல்லை. கோபத்தை தவிர்ப்பது நன்மை பயக்கும். கடன் கேட்டால் கிடைக்கும். எந்தவொரு வேலை கிடைத்தாலும் அதனைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 75 சதவீதம் நன்றாக இருக்கும். அங்களா பரமேஸ்வரி வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+