மகர ராசி பலன்: தொட்ட காரியமெல்லாம் வெற்றி.. பணமழை கொட்டும், சொந்த வீடு வாங்கும் யோகம்
Rasi palan this week: அக்டோபர் 26 ஆம் தேதி முதல் நவம்பர் 1 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 9 ஆம் தேதி முதல் ஐப்பசி 15 வரை) காலகட்டத்தில் மகர ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

கன்னியில் இருக்கும் சூரிய பகவான் துலாம் ராசிக்கு வரக்கூடிய மாதமே ஐப்பசி மாதமாகும். இந்த மாதத்தில் நிறைய பிரச்சனைகள் தீரும். கும்பம், ரிஷபம், கன்னி ஆகிய ராசிக்கு இந்த வாரத்தில் அபாரமான முன்னேற்றம் ஏற்படும். சந்திரன் தனுசு ராசியில் இருந்து மீன ராசிக்கு செல்கிறார். செவ்வாய், குரு இணைவதால் அபரிமிதமான மாற்றமும், எதிர்பாராத சுப நிகழ்ச்சியும் நடக்கும் வாய்ப்புள்ளது.
அதன்படி, அக்டோபர் 26 ஆம் தேதி முதல் நவம்பர் 1 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 9 ஆம் தேதி முதல் ஐப்பசி 15 வரை) காலகட்டத்தில் மகர ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
மகர ராசி பலன்
மகர ராசியினருக்கு இந்த வாரத்தில் இருந்து அடுத்த 4 மாதங்களுக்கு சிவன் கோயிலுக்கு நெய் தானமாகக் கொடுப்பது நன்மை பயக்கும். காப்பர் பொருள்களை உண்டியலில் காணிக்கையாக போடுவது நன்மை பயக்கும். அஷ்டமத்தில் குரு போவதால் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. அன்னதானத்துக்கு உதவி செய்வது, அன்னாபிஷேகம் செய்வது ஆரோக்கியத்தில நன்மை பயக்கும்.
ஆரோக்கியம்
மகர ராசி கணவராக இருந்தால் மனைவியின் உறவிலும், மனைவியாக இருப்பின் கணவரின் உறவில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. ஒரு சிலருக்கு அப்பா, அம்மாவின் ஆரோக்கியத்தில் பிரச்சனை வருவதற்கான வாய்ப்புள்ளது. கழிவுப் பாதை, அடிவயிறு, நரம்புகள், பின்பகுதியில் வலி போன்றவை வருவதற்கான வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
முன்னேற்றம்
வேலை நிமித்தமான எல்லா முயற்சிகளிலும் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். தொழில், வேலை, அந்தஸ்து, உத்தியோக, வியாபாரத்தில் பெரும் வளர்ச்சி காணக்ககூடிய காலகட்டம். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சொந்த வீடு வாங்குவது, நிலம் வாங்குவது போன்ற அமைப்பு உள்ளது. பண வரவு நன்றாக இருக்கும். நேர்மறையான காலகட்டமாக இருக்கும்.
கவனம்
விலை உயர்ந்த பொருள்கள் விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வாகனத்தில் செல்லும்போது விதிமுறைகளை மீறுவதை தவிர்ப்பது நல்லது. கொடுத்த வாக்கை குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் காப்பாற்றும் அமைப்பு. மனம், பணம் ரீதியான பிரச்சனைகள் நீங்கும். தொழில் ரீதியாக அற்புதமான அமைப்பு ஏற்படும்.
சங்கடங்கள் தீரும்
அரசுத் துறை, அரசியல்வாதிகளுக்கு பெரும் வெற்றியும், செல்வாக்கையும் ஏற்படுத்தக்கூடிய அமைப்பு. சகலவித தோஷங்களும் பரிபூரணமாக நிவர்த்தியாகும். இதுவரை இருந்து வந்த சங்கடங்கள் தீரும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு குறித்து மற்றவர்களிடம் கலந்தாலோசித்து நேரத்தை வீணடிப்பதைத் தவிர்ப்பது நல்லது.
வெற்றி மேல் வெற்றி
முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். நல்ல மாற்றமும், பெரும் வெற்றியும் காணக்கூடிய காலகட்டமாக இருக்கும். கோபத்தைக் கட்டுப்படுத்துவது நல்லது. பிள்ளைகளைப் பற்றி அதீதமாக சிந்திப்பதை தவிர்ப்பது நல்லது. விநாயகர், சிவன் வழிபாடு நன்மையைத் தரும். நெய் தானமாகக் கொடுப்பது ஏற்றத்தைத் தரும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 85 சதவீதம் நன்றாக இருக்கும்.


Click it and Unblock the Notifications
