மகர ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்குது.. 85% சாதகம்.. ஆனால் இந்த விஷயத்தில் கவனம்
Rasi palan this week: செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையிலான (ஆவணி 28 முதல் புரட்டாசி 3) காலகட்டத்தில் மகரம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

இந்த வாரத்தில் ஆவணி மாதம் நிறைவடைந்து புரட்டாசி மாதம் ஆரம்பிக்கவுள்ளது. புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதமாகும். சிம்மத்தில் இருக்கும் சூரிய பகவான் கன்னி ராசிக்கு வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம், கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் செப்டம்பர் 27 ஆம் தேதி மஹாளயபட்சம் ஆரம்பிக்கிறது. மஹாளய அமாவாசை அக்டோபர் 10 ஆம் தேதி வருகிறது. இந்த நாளில் ஏழைகளுக்கு உணவு தானமாக அளிப்பது, அரிசி பருப்பு வாங்கி கோயிலுக்கு கொடுப்பது நன்மை பயக்கும்.
இதைத்தொடர்ந்து, அக்டோபர் 11 ஆம் தேதி நவராத்திரி ஆரம்பிக்கிறது. அந்த வகையில், செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையிலான (ஆவணி 28 முதல் புரட்டாசி 3) காலகட்டத்தில் மகர ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
மகரம் ராசி பலன்
மகர ராசியினருக்கு முன்னேற்றத்திற்கான முக்கியமான காலகட்டமாக இருக்கும். இடுப்பு, வயிறு, பின்பகுதிகளில் வரும் பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை. அப்பாவின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பயணங்கள் தடைபடுவதற்கான வாய்ப்புள்ளது. வெளிநாடுகளில் பயணம் செய்வோருக்கு தள்ளிப்போகும் அல்லது தடைபடும்.
கவனம்
வெளிநாடுகளில் ஆவணங்கள் தொடர்பான விஷயங்கள் காணாமல் போவது, சட்ட சிக்கலில் சிக்குவது போன்ற அமைப்பு உள்ளது. அப்பா சொத்துகளில் பிரச்சனை வருவதற்கான வாய்ப்புள்ளது. அரசு சார்ந்த ஆவணங்கள் தொடர்பான பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளது. உயர்கல்வியில் இருப்பவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
கெட்ட செய்தி
தேவையில்லாமல் தகவல் தொடர்பு கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. அடுத்த ஒரு மாதத்திற்குள் கெட்ட செய்திகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. சண்டை, சச்சரவுகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். லாப ஸ்தானத்தில் சுக்கிரன் வரப்போவதால் வேலையில் பெரிய அளவு பிரச்சனைகள் ஏற்படாது. உங்களுக்கும், மற்றவர்களுக்கும் ஒரு அந்நியோன்யமே இருக்காது. யாரையும் தனக்கு பிடிக்காது என்கிற நிலைமை இருக்கும்.
பரிகாரம்
வண்டி வாகனத்தில் கவனமாக செல்ல வேண்டும். உறவுகளிடம் தகராறு செய்யாமல் பார்த்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் துணையிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. செவ்வாயும், குருவும் ராசியைப் பார்ப்பதால் மிக மிக கவனம் தேவை. மனைவியாக இருந்தால் கணவரின் உடல்நிலை, கணவராக இருந்தால் மனைவியின் உடல்நிலையைப் பார்த்துக் கொள்வது நல்லது. பசு மாடுகளுக்கு புதன்கிழமை தோறும் உணவு தானமாக கொடுப்பது தோஷத்தை நிவர்த்தி செய்யும்.
சாதகம்
குருவின் பார்வை இருப்பதால் எல்லா காரியங்களையும் ஈஸியாக முடிப்பது, அதில் ஜெயிப்பது போன்ற அமைப்பு உள்ளது. பல நல்ல விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக நடக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் கவனம் தேவை. வயிறு தொடர்பான பாதிப்புகளில் கவனம் தேவை. சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 85 சதவீதம் நன்றாக இருக்கும். குலதெய்வ வழிபாடு ஏற்றத்தைத் தரும். கபாலீஸ்வரர் வழிபாடு சகலவித நன்மைகளைத் தரும்.


Click it and Unblock the Notifications
