Rasi palan this week: மகர ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. பிளான் பண்ணி முடிப்பீங்க

Subscribe to Oneindia Tamil

Rasi palan this week: செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரையிலான (ஆவணி 21 முதல் 27) காலகட்டத்தில் மகரம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

rasi-palan-this-week-what-kind-of-benefits-will-get-magaram-rasi-people-from-sep-7-to-13

சூரிய பகவான் சிம்ம ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆவணி மாதமாகும். சூரியன் தனது சொந்த ராசியில் வந்து அமர்வதால் மிகவும் வலுவாக காணப்படுவார். ரத்த அழுத்தம், வெர்டிகோ உள்ளவர்கள் இந்த மாதத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில், செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரையிலான (ஆவணி 21 முதல் 27) காலகட்டத்தில் மகரம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

மகரம் ராசி பலன்

மகரம் ராசியினருக்கு பூர்வீக சொத்துகளில் இருந்து வரும் பஞ்சாயத்துகள், பிரச்சனைகள் நிவர்த்தியாகும். சீட் கிடைக்கவில்லை என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு மெரிட்டில் சீட் கிடைக்கும். திட்டமிட்ட கல்லூரியில் சீட் கிடைக்கும். புதிய விஷயங்களை எடுத்து செய்வீர்கள். பெரிய அளவுக்கு மாற்றமும், நம்பிக்கையும் ஏற்படும். பெரிய பொறுப்புகள் தேடி வரும்.

தொழிலில் ஜாக்பாட்

மனம் சஞ்சலப்படும் சூழ்நிலையில், சஞ்சலப்படாமல் எளிமையாக காரியத்தை முடிக்கும் நல்ல அமைப்பு உள்ளது. நீங்கள் திட்டமிட்ட விஷயங்கள் எளிமையாகக் கிடைக்கும். வீட்டில் அடுத்தடுத்து நல்ல காரியங்கள் நடக்கும். 10 ஆம் இடமான தொழில் ஸ்தானம் அற்புதமாக இருக்கிறது. உணவு, பொதுமக்கள், அழகு, ஆடம்பரம் சம்பந்தப்பட்ட தொழில்களில் வெற்றி ஏற்படும்.

புதிய வாய்ப்பு தேடி வரும்

உற்பத்தி தொழிலை ஆரம்பிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கண்டிப்பாக ஆரம்பிக்கும் யோகம் உண்டாகும். புதிதாக கடன் வாங்கி தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். ஏற்றம் தரும் காலகட்டமாக இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். அதனைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும்.

கவனம்

ஆவணி மாதம் முழுவதும் கவனமாக இருப்பது நல்லது. வண்டி, வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். சட்ட சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்றமும், நம்பிக்கையும் ஏற்படும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் பரிபூரண நிவர்த்தியாகும். நம்பிக்கையும், அனுகூலமும் ஏற்படும்.

வழிபாடு

உறவுகளுக்குள் இருந்து வந்த சங்கடங்கள் பரிபூரண நிவர்த்தியாகும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். பூமி சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஏற்றமும், நம்பிக்கையும் ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் முன்னேற்றம் ஏற்படும். பெருமாள் தாயார், அனுமன் வழிபாடு மேன்மையை ஏற்படுத்தும். நரம்பு சம்பந்தப்பட்ட, வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகளில் கவனம் தேவை.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகள், சட்டத்திற்குப் புறம்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. நாமக்கல் ஆஞ்சநேயர் வழிபாடு ஏற்றத்தைத் தரும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 85 சதவீதம் நன்மையை ஏற்படுத்தும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+