ஆட்டத்தை ஆரம்பிக்கும் மீன ராசி.. அக்டோபர் 5-11 இல் காத்திருக்கும் அதிர்ஷ்ட பலன்கள்

Subscribe to Oneindia Tamil

Rasi palan this week: அக்டோபர் 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 18 முதல் 24 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் மீனம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

rasi-palan-this-week-what-kind-of-benefits-will-get-meenam-people-from-oct-5-to-11

புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதமாகும். சிம்மத்தில் இருக்கும் சூரிய பகவான் கன்னி ராசிக்கு வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம், கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. பெண்களை பெருமைப்படுத்தக் கூடிய நவராத்திரி வரக்கூடிய அற்புதமான மாதம். அக்டோபர் 11 ஆம் தேதி நவராத்திரி ஆரம்பிக்கிறது. நவராத்திரி 9 தினங்களில் தேவிகளை வழிபாடு செய்வது ஏராளமான நன்மைகளைத் தரும்.

அந்த வகையில், அக்டோபர் 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 18 முதல் 24 ஆம் தேதி) காலகட்டத்தில் மீனம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

மீனம் ராசி பலன்

மீனம் ராசியினருக்கு எல்லோருமே ஆதரவாக இருப்பார்கள். ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். தலைவலி, அடிவயிறு, கழிவுப் பாதை தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை. பஞ்சம ஸ்தானத்தில் இருக்கும் கிரகங்கள் உற்றார், உறவினர்கள், ரத்த பந்த உறவுகளில் கெட்ட செய்திகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. வரும் அமாவாசை நல்லது இல்லை.

முன்னேற்றம்

குடும்பத்தில் மற்றவர்கள் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். துணைவியின் தேக ஆரோக்கியம், குடும்பத்தை பத்திரமாக பார்த்துக் கொள்வது நல்லது. நகை, ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். முதலீடுகளை செய்து மகிழ்வீர்கள். வீடு, நிலம் வாங்கும் யோகம் ஏற்படும். நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். பயணங்களின்போது புதிய அறிமுகங்களிடம் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

சிக்கல்

உறவுகளுக்குள் தேவையில்லாத பதட்டத்தை தவிர்ப்பது நல்லது. உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் மீது மிகுந்த கவனம் தேவை. இழுபறியாக இருக்கும் சிக்கல்களால் பெரும் கஷ்டத்தைக் கொடுக்கும் வாய்ப்புள்ளது. கணவன், மனைவி உடல்நிலையில் கவனம் தேவை. பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதை தவிர்ப்பது நல்லது.

திடீர் அதிர்ஷ்டம்

கணவராக இருந்தால் மனைவி, மனைவியாக இருந்தால் கணவரின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. அபிராமி அந்தாதியைப் படிப்பது நன்மை பயக்கும். திடீர் அதிர்ஷ்டம், திடீர் பண வரவு உண்டாகும். திடீர் புகழ் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. கெளரவம், மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தில் இணக்கமாகச் செல்வது நல்லது. குடும்பத்தில் வாக்குவாதத்தை தவிர்த்துக் கொள்வது நன்மைகளைத் தரும்.

வழிபாடு

மனதிற்குப் பிடித்த விஷயங்களைச் செய்து மகிழ்வீர்கள். மதுரை, திருப்பதி செல்லும்போது மிகுந்த கவனமாக செல்ல வேண்டும். பஞ்சபூதங்கள், நெருப்பு, நெரிசலால் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. மீனாட்சியம்மனை வீட்டிலேயே வழிபாடு செய்வது நன்மை பயக்கும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 95 சதவீதம் நன்றாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+