இனி ஆட்டமே வேற லெவல்.. மீனம் ராசிக்கு காத்திருக்கும் மெகா ஜாக்பாட்

Subscribe to Oneindia Tamil

Rasi palan this week: செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் அக்டோபர் 4 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 12 முதல் 17 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் மீனம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

rasi-palan-this-week-what-kind-of-benefits-will-get-meenam-people-from-sep-28-to-oct-4

ஆவணி மாதம் நிறைவடைந்து புரட்டாசி மாதம் ஆரம்பித்துள்ளது. புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதமாகும். சிம்மத்தில் இருக்கும் சூரிய பகவான் கன்னி ராசிக்கு வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம், கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் செப்டம்பர் 27 ஆம் தேதியான இன்று மஹாளயபட்சம் ஆரம்பிக்கிறது. மஹாளய அமாவாசை அக்டோபர் 10 ஆம் தேதி வருகிறது. இந்த நாளில் ஏழைகளுக்கு உணவு தானமாக அளிப்பது, அரிசி பருப்பு வாங்கி கோயிலுக்கு கொடுப்பது நன்மை பயக்கும்.

இதைத்தொடர்ந்து, அக்டோபர் 11 ஆம் தேதி நவராத்திரி ஆரம்பிக்கிறது. அந்த வகையில், செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் அக்டோபர் 4 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 12 முதல் 17 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் மீனம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

மீனம் ராசி பலன்

மீன ராசியினருக்கு மிகவும் கவனமாக இருக்கக்கூடிய காலகட்டம். இந்த வாரத்தில் உங்களுக்கு பணத்திற்குப் பஞ்சம் இருக்காது. தொழில் செய்பவர்கள், கட்டுமானத் துறையில் இருப்பவர்கள், சர்ஜிக்கல், மருத்துவத் துறையில் இருப்பவர்களுக்கு நன்றாக இருக்கும். பஞ்சம ஸ்தானம் வலுவில்லாமல் இருப்பதால் இதயம் சார்ந்த பிரச்சனைகளை பார்த்துக் கொள்ள வேண்டும்.

பணவரவு

சனி வக்கிரமாக இருப்பதால் ஒரே விஷயத்தை இரண்டு, மூன்று முறை செய்ய வேண்டிய நிலை ஏற்படும். தள்ளிப்போய் சில விஷயங்கள் நடக்கும். அஷ்டமத்தில் புதன், சுக்கிரன் இருப்பதால் கிம்பளம் சார்ந்த பணங்கள் வந்து சேரும். ஆசைப்பட்ட சில விஷயங்கள் இப்போது நடக்கக்கூடிய அற்புதமான அமைப்பு உள்ளது. எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். உறவுகளுக்குள் இருந்த சிக்கல் தீரும். கழிவுப் பாதை, அடிவயிறு தொடர்பான பாதிப்புகளில் கவனம் தேவை. தினந்தோறும் உடற்பயிற்சி மிகுந்த அவசியம்.

ஆரோக்கியம்

ஆரோக்கியத்தில் ரத்த சர்க்கரை, அடிவயிறு, கழிவுப் பாதை தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை. நிம்மதியற்ற நிலைமைகளில் இருந்து நிம்மதியான நிலைமைகளுக்குச் செல்வீர்கள். அதிகமான பொறுப்புகள் எடுத்துக் கொள்வதைத் தவிர்த்துக் கொள்வது நல்லது. புதிய விஷயங்களால் நிறைய நன்மைகள் நடக்கும்.

முன்னேற்றம்

தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு என எல்லா விஷயங்களிலும் ஏற்றம் ஏற்படும். குடும்பத்தில் சிலரால் தேவையில்லாத குழப்பங்கள் வரலாம். பூமி சம்பந்தப்பட்ட விஷயத்தில் யோகம் உண்டாகும். தொழில், பணவரவு, அசையும் அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். சுபகாரியங்கள் நடக்கும். குடும்பத்தில் துணை, பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருக்க கூாது.

வழிபாடு

முடிவெட்டுவது போன்றவற்றை செய்யாமல் இருப்பது நல்லது. ஒருவாரத்திற்குப் பிறகு வெட்டிக் கொ்ளலாம். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 85 சதவீதம் நன்றாக இருக்கும். திட்டமிடும் காரியங்கள் தள்ளிப்போய் நடக்கும். கபாலீஸ்வரர் கோயிலுக்கு தினமும் செல்வது நன்மை பயக்கும். எதிர்பாராத நன்மைகள் நடக்கும். உக்கிர நரசிம்மரை வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+