Meenam: குரு பார்வையால் அதிர்ஷ்டம் பெறும் மீன ராசி.. சிக்கல் தீரும் நேரம்.. என்ஜாய்
Weekly Rasi Palan: ஆகஸ்ட் 10 முதல் ஆகஸ்ட் 16 ஆம் தேதி (ஆடி 25 முதல் 31 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மீனம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் கடக ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆடி மாதமாகும். ஜூலை 17 ஆம் தேதி ஆடி மாதம் பிறந்துள்ளது. அம்மனுக்கு உகந்த மாதமான இந்த ஆடி மாதத்தில் பல்வேறு முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், ஆகஸ்ட் 10 முதல் ஆகஸ்ட் 16 ஆம் தேதி (ஆடி 25 முதல் 31 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மீனம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
மீனம் ராசி பலன்
மீனம் ராசியினருக்கு யோக பலத்தை அதிகளவில் பெறும் காலகட்டம். பிள்ளைகள் விஷயத்தில் பிரச்சனைகள் ஏற்படக்கூடிய வாரம். பிள்ளைகளின் படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரம், பழக்கவழக்கம், உங்களுக்கும் அவர்களுக்கும் இருக்கும் உறவுகளில் கவனமாக இருக்க வேண்டும். எதிர்பார்க்காத நிறைய நன்மைகள் ஏற்படும்.
குரு பார்வை
பூமி சம்பந்தப்பட்ட விஷயங்களில் அற்புதங்கள் ஏற்படும். தொழிலில் காணப்பட்டிருந்த சங்கடங்கள் நிவர்த்தியாகும். வியாபாரத்தில் காணப்பட்ட பாதிப்புகள் நிவர்த்தியாகும். குரு பார்வையால் நிறைய நன்மைகள் ஏற்படும். யோசிக்காமல் எல்லா விஷயங்களையும் செய்யக் கூடிய உங்களுக்கு நல்ல அனுகூலங்கள் ஏற்படும்.
சிக்கல் தீரும்
வேலை, தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த போட்டிகள் சிக்கல்கள் நீங்கும். சாதகமான நிலைமைகள் ஏற்படும். அனைத்துப் பிரச்னைகளும் முடிவுக்கு வரக்கூடிய நல்ல காலகட்டம். தொழில் செய்வதற்கான அரசு உதவிகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். பொருளாதார சிக்கல்கள் படிப்படியாக குறையும்.
தன பாக்கியம் உண்டாகும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கைத் தரம் உயரும். பொருள் சேர்க்கை அதிகரிக்கும். எல்லா பிரச்சனைகளையும் எளிதாக சமாளிப்பீர்கள். புதிய சொத்துக்கள் வந்து சேரும் அமைப்பு. குல தெய்வ வழிபாடுகளைச் செய்து மகிழ்வீர்கள்.
வழிபாடு
இழுபறியாக உள்ள சிக்கல்கள் தீரும் காலம். வயிறு, முதுகு, கழிவுப்பாதைகள், கால் பாதம் தொடர்பான பாதிப்புகளில் கவனம் தேவை. மோர் போன்றவற்றை உணவில் அதிகளவில் சேர்த்துக் கொள்வது நல்லது. விநாயகரையும், சனி பகவானையும் வழிபாடு செய்வது சகலவித முன்னேற்றங்களையும் தரும்.


Click it and Unblock the Notifications
