வார ராசி பலன்: மேஷ ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. எந்தெந்த விஷயங்களில் கவனம் தேவை

Subscribe to Oneindia Tamil

Rasi palan this week: நவம்பர் 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 30 ஆம் தேதி முதல் கார்த்திகை 6 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் மேஷம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

rasi-palan-this-week-what-kind-of-benefits-will-get-mesham-people-from-nov-15-to-22

கார்த்திகை மாதம் இந்த வாரம் பிறக்கவுள்ளது. விருச்சிக ராசியில் சூரியன் வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதமாகும். விருச்சிகம் என்பது செவ்வாய் வீடு. பகை வீட்டில் சூரியன் இருக்கிறார். பெரிய தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள், இசைக் கலைஞர்கள் எல்லோரும் இந்த மாதத்தில் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். பல்வேறு முக்கிய கிரக மாற்றங்கள் நிகழ்ந்துள்ள நிலையில், நவம்பர் 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 30 ஆம் தேதி முதல் கார்த்திகை 6 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசியினருக்கு 8 ஆம் இடத்தில் சூரியன் இருப்பதால் மேலதிகாரிகளிடம் கோபம் வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. தர்க்கம், கோபம், வீண்வாதம் போன்றவற்றை தவிர்த்து அவர்களிடம் இணக்கமாகச் செல்வது நல்லது. அரசாங்கத்தில் இருப்பவர்கள், அரசு உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் கோபப்படுவது தேவையில்லாத பிரச்சனையையும், கஷ்டத்தையும் ஏற்படும்.

கவனம்

சுக்கிரன் இருப்பதால் குடும்பத்தில் அந்நியர் தலையீடு, மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் உங்களுடைய தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். யாராவது பேசுவது பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கிவிடுவது நல்லது. அவர்களிடம் கத்துவது, கோபப்படுவது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. மற்றவர்களைத் திருத்தப் பார்ப்பதைத் தவிர்ப்பது நன்மை பயக்கும்.

திடீர் அதிர்ஷ்டம்

திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படும். பெரிய மனிதர்களைச் சந்திக்கக்கூடிய அமைப்பு ஏற்படும். அரசு தொடர்பான விஷயங்களில் அனுகூலங்கள் காணப்படும். தொழில் ரீதியாக ராகு 10 இல் இருப்பதாலும், சனியின் பார்வை இருப்பதாலும் தொழிலில் அற்புதமான முன்னேற்றம் ஏற்படும். பலதரப்பட்ட வருமானங்கள் வரும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள்.

கவனம்

கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். குழந்தைகள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு கொழுப்பு தொடர்பான பாதிப்புகள் ஏற்படும். பின்புறப் பகுதியில் வலிகள் வரும் வாய்ப்புள்ளது. பணம் கொடுக்கல் வாங்கலில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பெரியவர்களிடம் சண்டையிடாமல் இருப்பது நல்லது.

வழிபாடு

ஆரோக்கியத்தில் அறுவை சிகிச்சை, சிறிய பரிசோதனைகள் மேற்கொள்வீர்கள். ரத்தத்தில் பரவும் நோய்கள், ரத்த அழுத்தம், கொழுப்பு, சர்க்கரை தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். கழிவுப் பாதை தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை. அனுமன் வழிபாடு ஏற்றத்தைத் தரும். பழனி முருகனை வழிபாடு செய்வது மேன்மையைத் தரும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 80 சதவீதம் நன்றாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+