ஆகஸ்ட் 10 முதல் 16 வரை மேஷ ராசி பலன்.. இந்த 7 நாட்களில் அடிக்கும் ஜாக்பாட்.. ஒரு விஷயத்தில் கவனம்

Subscribe to Oneindia Tamil

Weekly Rasi Palan: ஆகஸ்ட் 10 முதல் ஆகஸ்ட் 16 ஆம் தேதி (ஆடி 25 முதல் 31 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

rasi-palan-this-week-what-kind-of-benefits-will-get-mesham-rasi-august-10-to-16

சூரிய பகவான் கடக ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆடி மாதமாகும். ஜூலை 17 ஆம் தேதி ஆடி மாதம் பிறந்துள்ளது. அம்மனுக்கு உகந்த மாதமான இந்த ஆடி மாதத்தில் பல்வேறு முக்கய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், ஆகஸ்ட் 10 முதல் ஆகஸ்ட் 16 ஆம் தேதி (ஆடி 25 முதல் 31 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

மேஷம் ராசி பலன்

மேஷ ராசியினருக்கு எதிர்பார்த்த விஷயங்களில் நன்மைகள் நடக்கும் வாரம் இது. இடம், வீடு, மண் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்படும். இதுவரை இருந்து வந்த பலவிதமான கஷ்டங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் தீரும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு ரீதியாக இருந்து வந்த சங்கடங்கள் நீங்கும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும்.

வெற்றி

மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. அதேபோல, உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. வேலைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. பெரிய வெற்றிகள் ஏற்படும். தொழிலில் இருந்து வந்த தடைகள் நீங்கும். மகான்கள் தரிசனம், தெய்வ வழிபாடுகளை செய்து மகிழ்வீர்கள். உணவுக் கட்டுப்பாட்டில் கவனமாக இருக்க வேண்டும்.

தைரியம், தன்னம்பிக்கை

சூரியன், குரு, புதன் ஆகியவை நல்ல நிலையில் இருக்கின்றன. அதனால் அற்புதமான காலகட்டமாக இருக்கும். ராசியதிபதி 3 ஆம் இடத்தில் அமர்ந்துள்ளதால் தைரியம், தன்னம்பிக்கை ஏற்படும். நினைத்ததை சாதிக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். பஞ்சம ஸ்தானத்தில் சூரியன், கேது இருப்பது முதல் குழந்தையின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

வழிபாடு

பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வண்டி, வாகனத்தில் மாற்றம் ஏற்படும். வயிறு சார்ந்த பிரச்சனைகள் தீரும். மன அழுத்தம் தீர நரசிம்மர், விநாயகர் வழிபாடு ஏற்றத்தைத் தரும். எல்லா விதத்திலும் சந்தோஷமும், அனுகூலமும் ஏற்படும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 80 சதவீதம் நன்றாக இருக்கும் நல்ல காலகட்டம். திருவண்ணாமலையில் உள்ள ரமண மகரிஷி ஆசிரமத்திற்குச் சென்று தியானம், வழிபாடு செய்வது நன்மையைத் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+