Rasi palan this week: மேஷ ராசிக்கு 7 நாட்களில் வரும் குட்நியூஸ்.. சொல்லி அடிக்கும் வாரம்

Subscribe to Oneindia Tamil

Rasi palan this week: செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 4 முதல் 10 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் மேஷம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

rasi-palan-this-week-what-kind-of-benefits-will-get-mesham-rasi-people-from-sep-21-to-27

இந்த வாரத்தில் ஆவணி மாதம் நிறைவடைந்து புரட்டாசி மாதம் ஆரம்பித்துள்ளது. புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதமாகும். சிம்மத்தில் இருக்கும் சூரிய பகவான் கன்னி ராசிக்கு வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம், கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் செப்டம்பர் 27 ஆம் தேதி மஹாளயபட்சம் ஆரம்பிக்கிறது. மஹாளய அமாவாசை அக்டோபர் 10 ஆம் தேதி வருகிறது. இந்த நாளில் ஏழைகளுக்கு உணவு தானமாக அளிப்பது, அரிசி பருப்பு வாங்கி கோயிலுக்கு கொடுப்பது நன்மை பயக்கும்.

இதைத்தொடர்ந்து, அக்டோபர் 11 ஆம் தேதி நவராத்திரி ஆரம்பிக்கிறது. அந்த வகையில், செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 4 முதல் 10 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசியினருக்கு நன்மைகள் அதிகரிக்கும் காலகட்டம். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு அற்புதமாக இருக்கும். பணவரவு அதிகரிக்கும். முதலீடுகள் செய்யும் அமைப்பு உள்ளது. தொழிலில் படிப்படியாகத் திட்டமிட்டு வெற்றி பெறுவீர்கள். சோம்பலைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் துணை, பிள்ளைகள் என்ன சொன்னாலும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சாதாரணமாக எடுத்துக் கொள்வது நல்லது.

பிரச்சனை தீரும்

அரசுத் துறை, அரசியல்வாதிகள் பெரிய பொறுப்புகளுக்கு வருவார்கள். கெளரவம் ஏற்படும். இழுபறியாக இருந்த விஷயங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது. சிக்கல்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். யோகமும், நம்பிக்கையும் ஏற்படக்கூடிய காலகட்டம். உறவுகள் தொடர்பான விஷயங்களில் மேன்மை ஏற்படும். உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.

பொருள் சேர்க்கை

அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். தெய்வ தரிசனங்களை செய்யும் அமைந்துள்ளது. சிறு சிறு மனக் குழப்பங்கள், டென்ஷன் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. பயணங்களில் தடைகள் ஏற்பட்டு நடக்கும். ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. வயிறு பாதிப்புகள், பின்பகுதியில் வலிகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. ராசியாதிபதி நீச்சமாவதால் அம்மா வழி சொந்தங்கள், உறவினர்கள் மூலம் தொந்தரவுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.

பணவரவு

சுக்கிரன் பலமாக இருப்பதால் பண வரவு நன்றாக இருக்கும். உடம்பு, ஆரோக்கியம் நன்றாக இருக்கும். எல்லா விஷயங்களும் எளிமையாக நடக்கும். விரயத்தில் இருக்கும் சந்திரனால் சிறு சிறு மன சஞ்சலங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. 25 ஆம் தேதி மதியம் முதல் சஞ்சலம், தூக்கமின்மை போன்றவை ஏற்படும். இந்த காலகட்டத்தில் பணம் கொடுத்து மாட்டிக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

வழிபாடு

பிரச்சனைகள், சிரமங்கள் தீரும். சுறுசுறுப்புடன் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். லாபம் ஏற்படும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 75 சதவீதம் நன்றாக இருக்கும். திருந்செந்தூர் முருகன் வழிபாடு சகலவித நன்மைகளையும் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+