Rasi Palan This Week: மிதுன ராசிக்கு காத்திருக்கும் பிரகாசமான மாற்றம்.. அடுத்தடுத்து முன்னேற்றம்

Subscribe to Oneindia Tamil

Weekly Rasi Palan: ஆகஸ்ட் 10 முதல் ஆகஸ்ட் 16 ஆம் தேதி (ஆடி 25 முதல் 31 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

rasi-palan-this-week-what-kind-of-benefits-will-get-mithunam-rasi-august-10-to-16

சூரிய பகவான் கடக ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆடி மாதமாகும். ஜூலை 17 ஆம் தேதி ஆடி மாதம் பிறந்துள்ளது. அம்மனுக்கு உகந்த மாதமான இந்த ஆடி மாதத்தில் பல்வேறு முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், ஆகஸ்ட் 10 முதல் ஆகஸ்ட் 16 ஆம் தேதி (ஆடி 25 முதல் 31 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசியினருக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு ரீதியாக நிறைய நன்மைகள் காணப்படும். இழுபறியாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். இடமாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம், படிப்பு மாற்றம் என அனைத்து விதமான நல்ல மாற்றங்களும் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பூமி சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும்.

முன்னேற்றம்

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அடுத்தடுத்து முன்னேற்றம் ஏற்படும். பழைய கடன்களை அடைத்து முடிப்பதற்கான யோகங்கள் உண்டாகும். பிள்ளைகளின் பழக்கவழக்கங்கள் வண்டி, வாகனங்களில் கவனம் தேவை. தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். தொடர்ச்சியாக இருந்து வந்த மன தாங்கல்கள் தீரும்.

வெற்றி மேல் வெற்றி

நினைத்த காரியங்கள் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் புதன், சூரியன், குரு அமர்ந்திருப்பது அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். தன பாக்கியம் உண்டாகும். நினைத்த காரியங்கள் கைகூடும். பணம், பொருளாதாரத்திற்கு எந்தவிதமான பஞ்சமும் இருக்காது. கழுத்து, இடது காது, வலது கால், மாமனாரின் ஆரோக்கியம் கெடுவது, தொண்டை பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.

யோகம்

வேலை வேண்டாம் என்கிற எண்ணம் ஏற்படும். பெரிய அளவுக்கு மாற்றங்கள் ஏற்படும். வீடு கட்டுவது, நிலம் வாங்குவது, சொத்து வாங்குவது, காளை மாடு வாங்குவது போன்ற யோகங்கள் உண்டாகும். சொகுசான வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும். கம்யூனிகேஷனில் தடைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. பழைய உத்தியோகம், தொழில், வியாபாரத்தை தொடங்கும் யோகம் உண்டு.

வழிபாடு

சந்தோஷம் 70 சதவீதமும், பொருளாதார ஏற்றம் 80 சதவீதமும் உண்டாகும் காலகட்டம். நவக்கிரகத்தில் இருக்கும் குரு வழிபாடு, விநாயகர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். ரத்த அழுத்தம், சர்க்ரை, காது, மூக்கு, தொண்டை, சளி தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+