Rasi palan this week: மிதுன ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. புதிய முயற்சிகளில் கவனம்

Subscribe to Oneindia Tamil

Rasi palan this week: செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 4 முதல் 10 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் மிதுனம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

rasi-palan-this-week-what-kind-of-benefits-will-get-mithunam-rasi-people-from-sep-21-to-27

இந்த வாரத்தில் ஆவணி மாதம் நிறைவடைந்து புரட்டாசி மாதம் ஆரம்பித்துள்ளது. புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதமாகும். சிம்மத்தில் இருக்கும் சூரிய பகவான் கன்னி ராசிக்கு வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம், கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் செப்டம்பர் 27 ஆம் தேதி மஹாளயபட்சம் ஆரம்பிக்கிறது. மஹாளய அமாவாசை அக்டோபர் 10 ஆம் தேதி வருகிறது. இந்த நாளில் ஏழைகளுக்கு உணவு தானமாக அளிப்பது, அரிசி பருப்பு வாங்கி கோயிலுக்கு கொடுப்பது நன்மை பயக்கும்.

இதைத்தொடர்ந்து, அக்டோபர் 11 ஆம் தேதி நவராத்திரி ஆரம்பிக்கிறது. அந்த வகையில், செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 4 முதல் 10 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் மிதுனம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மிதுன ராசி பலன்

மிதுன ராசி, லக்கினம் சார்ந்த நபர்கள் பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதை தவிர்ப்பது நல்லது. செவ்வாய் நீச்சமாக இருப்பதால் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். நிலம், வீடு சம்பந்தப்பட்ட ஆவணங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வேற்று மொழி மனிதர்களால் ஆதாயமும், மகிழ்ச்சியும் ஏற்படும்.

யோக பலம்

யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய காலகட்டம். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். உறவுமுறையில் இருந்த சிக்கல்கள் தீரும். பெரும் செல்வாக்கு கூடும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் எந்தவித மாற்றங்கள் வந்தாலும் அதனை எடுத்துக் கொள்வது நல்லது. யோசித்துக் கொண்டே இருக்காமல் செயலில் இறங்குவது நன்மையைத் தரும்.

தொழில்

தொழில் தொடங்குவதற்கான யோகம் உண்டாகும். எந்த விஷயத்தை தொடங்கினாலும் அதில் வெற்றி பெறும் யோகம் ஏற்படும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பற்கள் சார்ந்த பாதிப்புகள் வரும். வீட்டில் உள்ள ஆண்களுக்கு பிரச்சனைகள் வரும். வேலைகளில் அலைச்சல் ஏற்படும். குடும்பத்திற்குள் திடீர் பயணங்கள், சுபவிரயங்கள் ஏற்படும்.

சுக்கிரன் அருள்

நிறைய மாற்றங்களும், செலவுகள் ஏற்படும் காலகட்டம். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். அன்பால் தொந்தரவு ஏற்படும். திடீர் பண வரவு ஏற்படும். செல்வாக்கு உயரக்கூடிய காலகட்டம். பஞ்சம ஸ்தானத்தில் சுக்கிரன் இருப்பதால் குடும்ப உறவுகளுக்குள் பாசம் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது. குறிப்பாக, பெண்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

வழிபாடு

புதிய முயற்சிகள் தள்ளிப்போய் நடப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். வயிறு, கழிவுப் பாதைகளில் ஏற்படும் பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை. வெள்ளிக்கிழமை மதிய வேளைகளில் ஏழைகளுக்கு உணவு தானமளிப்பது ஏற்றத்தைத் தரும். கோவிந்தராஜப் பெருமாள் வழிபாடு சகலவிதமான நன்மைகளையும், முன்னேற்றத்தையும் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+