ரிஷப ராசிக்கு இந்த வாரம் காத்திருக்கும் அதிர்ஷ்டம்.. புதிய கார் வாங்கும் யோகம்

Subscribe to Oneindia Tamil

Rasi palan this week: செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் அக்டோபர் 4 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 11 முதல் 17 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் ரிஷபம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

rasi-palan-this-week-what-kind-of-benefits-will-get-rishabam-people-from-sep-28-to-oct-4

ஆவணி மாதம் நிறைவடைந்து புரட்டாசி மாதம் ஆரம்பித்துள்ளது. புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதமாகும். சிம்மத்தில் இருக்கும் சூரிய பகவான் கன்னி ராசிக்கு வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம், கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. மஹாளய அமாவாசை அக்டோபர் 10 ஆம் தேதி வருகிறது. இந்த நாளில் ஏழைகளுக்கு உணவு தானமாக அளிப்பது, அரிசி பருப்பு வாங்கி கோயிலுக்கு கொடுப்பது நன்மை பயக்கும்.

இதைத்தொடர்ந்து, அக்டோபர் 11 ஆம் தேதி நவராத்திரி ஆரம்பிக்கிறது. அந்த வகையில், செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் அக்டோபர் 4 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 11 முதல் 17 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் ரிஷபம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசியினருக்கு வரும் 30 ஆம் தேதி வரை நிறைய பணங்கள் வரும் அமைப்புள்ளது. பயணங்களை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் உடல்நிலை சரியில்லாதவர்களுக்கு உடல்நலம் மேம்படும். புதிய கடன் வாங்க முயற்சிப்பவர்களுக்கு கடன் கிடைக்கும். வேலை மாறக்கூடிய வாய்ப்புள்ளது. இடமாற்றம் வருவதற்கான வாய்ப்பும் உள்ளது. பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

ஆடம்பரம்

6 ஆம் இடத்தில் லட்சுமி நாரயண யோகம் ஏற்படுவதால் புதிய கார், வண்டி வாங்குவற்கான யோகம் உண்டாகும். படிப்பு அற்புதமாக இருக்கும். ஆடம்பரமான விஷயங்களில் உங்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். வாரத்தின் இறுதிப் பகுதியில் நிறைய பணவரவு ஏற்படும். ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை செலுத்துவது நல்லது. உடல் சூடால் வரக்கூடிய பாதிப்பு, நரம்பு, வயிறு தொடர்பான பாதிப்புகளில் கவனம் தேவை.

கடன் தீரும்

எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. அதேபோல, மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடாமல் இருப்பது நன்மை பயக்கும். உறவுகளிடம் மனம் விட்டுப் பேசுவது நல்லது. லாபமும், சந்தோஷமும் அனுகூலத்தை ஏற்படுத்தும்.

சிக்கல்கள் நீங்கும்

உறவுகளுக்குள் இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். மிகப்பெரிய மாற்றமும், நம்பிக்கையும் ஏற்படக்கூடிய காலகட்டம். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். தொழில் ரீதியாக அற்புதமான நன்மைகள் கிடைக்கும். இதுவரை இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். யோக பலன்கள் கிடைக்கும் அமைப்பு. எதிரிகள் விஷயத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாகத் தீரும்.

வழிபாடு

கழுத்து, முதுகு தண்டுவடம், கழிவுப்பாதை தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை. செவ்வாய்க்கிழமையில் பெருமாள் வழிபாடு செய்வது நிம்மதியைத் தரும். உறவுமுறையில் இருந்த சிக்கல்கள் தீரும். நினைத்த காரியங்கள் நடக்கும். பொறுமை மிக அவசியம். சந்தோஷம் 60 சதவீதமும், பொருளாதார ஏற்றம் 80 சதவீதமும் ஏற்படும். லட்சுமி நரசிம்மர் வழிபாடு யோகத்தைத் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+