இனி எல்லாமே ஏறுமுகம் தான்.. ஆகஸ்ட் 10 முதல் 16 வரை ரிஷப ராசிக்கான முழு பலன்கள்
Weekly Rasi Palan: ஆகஸ்ட் 10 முதல் ஆகஸ்ட் 16 ஆம் தேதி (ஆடி 25 முதல் 31 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் கடக ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆடி மாதமாகும். ஜூலை 17 ஆம் தேதி ஆடி மாதம் பிறந்துள்ளது. அம்மனுக்கு உகந்த மாதமான இந்த ஆடி மாதத்தில் பல்வேறு முக்கய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், ஆகஸ்ட் 10 முதல் ஆகஸ்ட் 16 ஆம் தேதி (ஆடி 25 முதல் 31 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷப ராசியினருக்கு காதல் கைகூடும். பழைய காதலன், காதலி, பழைய வரன்கள் கைகூடும் காலகட்டம். குடும்பத்தில் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடக்கும். வர வேண்டிய பண பாக்கிகள் வந்து சேரும். மருமகள், மருமகன் சண்டைகள் தீரக்கூடிய நேரம். மனதில் இருக்கும் எண்ணங்கள் ஈடேறும். நினைத்த காரியங்கள் கைகூடும்.
முன்னேற்றம்
குரு, புதன், சூரியன் நல்ல நிலையில் இருப்பதால் படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். அரசாங்க கோட்டக்களில் படிக்கும் அமைப்பு உள்ளது. அரசு வேலைகள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். இளைய சகோதரன் மூலமாக ஒத்துழைப்பு, உறுதுணை கிடைக்கும். லாப ஸ்தானத்தில் சனி வக்கிரமாக இருப்பதால் திட்டமிட்ட கல்லூரிகளில் வாய்ப்புகள் கிடைக்கும்.
லாபம் கொட்டும்
வார்த்தைகளால் பிரச்சனை வரும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. குடும்பம் நன்றாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் ஏற்படும். உறவுகள் தொடர்பான விஷயங்களில் மேன்மை உண்டாகும். அசையும், அசையா பொருள் சேர்க்கை, தைரியம் ஏற்படும் காலகட்டம். தொழில், உத்தியோகம், வியாபரம், படிப்பில் நன்மைகள் ஏற்படும்.
செல்வாக்கு
முதுகுத் தண்டுவடம், கழிவுப் பாதை தொடர்பான விஷயங்களில் சாதாரண விஷயங்கள் கூட பெரிதாகும் தன்மை உள்ளதால் கவனம் தேவை. பெரியளவில் நன்மை ஏற்படும். எதிர்பார்க்காத அனுகூலம் உண்டாகும். திட்டமிட்டு செய்யும் காரியங்களில் ஜெயம் ஏற்படும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். இதுவரை இருந்து வந்த அனைத்து பிரச்சனைகள், சிக்கல்கள் தீரும். தொடர்ச்சியாக இருந்து வந்த மன தாங்கல்கள் தீரும். ஏற்றங்கள் ஏற்படும் காலகட்டம்.
கவனம்
மூத்தவர்கள், சொந்தக்காரர்கள் மூலமாக நல்லவை நடக்கும் காலகட்டம். எல்லா விஷயங்களும் நன்றாக இருக்கும். பெண்கள் ஹார்மோன் சமநிலையற்ற தன்மையில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். இளைய சகோதரர்கள், உறவினர்கள் மூலமாக நிறைய நன்மைகள் கிடைக்கும் அற்புதமான காலகட்டமாக இருக்கும். நினைத்து பார்க்க முடியாத நன்மைகள் ஏற்படும்.
வழிபாடு
விஷ்ணு பகவான், விநாயகர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். குடும்பம் தொடர்பான விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஏற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. ஆண்களுக்கு தூக்கமின்மை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. முருகப் பெருமான் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.


Click it and Unblock the Notifications
