Rasi Palan This Week: சிங்கம் போல மாறும் சிம்ம ராசி.. நினைத்தது நிறைவேறும் யோகம்

Subscribe to Oneindia Tamil

Weekly Rasi Palan: ஆகஸ்ட் 10 முதல் ஆகஸ்ட் 16 ஆம் தேதி (ஆடி 25 முதல் 31 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

rasi-palan-this-week-what-kind-of-benefits-will-get-simmam-rasi-august-10-to-16

சூரிய பகவான் கடக ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆடி மாதமாகும். ஜூலை 17 ஆம் தேதி ஆடி மாதம் பிறந்துள்ளது. அம்மனுக்கு உகந்த மாதமான இந்த ஆடி மாதத்தில் பல்வேறு முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், ஆகஸ்ட் 10 முதல் ஆகஸ்ட் 16 ஆம் தேதி (ஆடி 25 முதல் 31 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசியினருக்கு நினைத்த காரியங்கள் கைகூடும். பொருளாதாரத்தில் ஏற்றம் ஏற்படும். வெளியூர், வெளிநாட்டில் இருந்து வருமானம் வந்து சேரும். பிஎப், கிராஜுவிட்டி, பென்சன் போன்றவற்றில் இருந்து பணங்கள் வந்து சேரும். நீண்ட கால முதலீடுகளால் நல்ல லாபம் கிடைக்கும். வெளியூர், வெளிநாடுகளில் சிட்டிசன்ஷிப், பிஆர் கிடைக்கும். செட்டிலாகும் யோகம் உண்டாகும்.

அதிர்ஷ்டம்

சனி வக்கிரமாக இருப்பதால் இந்தியாவில் செட்டிலாகும் யோகம் உண்டாகும். லாப ஸ்தானத்தில் செவ்வாய் அமர்ந்திருப்பதால் பெரிய நம்பிக்கை, அதிர்ஷ்டம் உண்டாகும். நம்பிக்கை ஏற்படும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். நண்பர்களாலும், மூத்தவர்களாலும் நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும்.

அனுகூலம்

மனதில் இனம்புரியாத வருத்தம், கோபம் உண்டாகும். தொழில் ரீதியாக அனுகூலம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்து வந்த கஷ்டங்கள் தீரும். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். பெரிய அளவிலான சந்தோஷம் உண்டாகும். உறவுகள் தொடர்பான விஷயங்களில் மேன்மை உண்டாகும். பெரிய அதிர்ஷ்டங்கள் ஏற்படும்.

கவனம்

புதிய பொறுப்புகளுக்கு வந்து சேருவீர்கள். விலை உயர்ந்த பொருள்களை கையாளுவோர் கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது. குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன் இருப்பதால் திருமண யோகம் உண்டாகும். நிறைய பேருக்கு திருமணம், நிச்சயதார்த்தம் நடக்கும் யோகம் உண்டு. சொகுசான விஷயங்களை வாங்கும் யோகம் உண்டாகும்.

வழிபாடு

சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 70 சதவீதம் நன்றாக இருக்கும். வரதராஜ பெருமாள் வழிபாடு, நாயகர் வழிபாடு, நவக்கிரகத்தில் உள்ள புதன் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. கண் திருஷ்டி ஏற்படும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். திருஷ்டியை போக்குவதற்கான பரிகாரங்கள் செய்து கொள்வது நன்மையைத் தரும். நரம்பு தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+