சிம்ம ராசிக்கு இந்த வாரம் எப்படி இருக்கும்?.. 2 விஷயங்களில் ரொம்ப கவனம்

Subscribe to Oneindia Tamil

Rasi palan this week: செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 4 முதல் 10 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் சிம்மம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

rasi-palan-this-week-what-kind-of-benefits-will-get-simmam-rasi-people-from-sep-21-to-27

இந்த வாரத்தில் ஆவணி மாதம் நிறைவடைந்து புரட்டாசி மாதம் ஆரம்பித்துள்ளது. புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதமாகும். சிம்மத்தில் இருக்கும் சூரிய பகவான் கன்னி ராசிக்கு வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம், கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் செப்டம்பர் 27 ஆம் தேதி மஹாளயபட்சம் ஆரம்பிக்கிறது. மஹாளய அமாவாசை அக்டோபர் 10 ஆம் தேதி வருகிறது. இந்த நாளில் ஏழைகளுக்கு உணவு தானமாக அளிப்பது, அரிசி பருப்பு வாங்கி கோயிலுக்கு கொடுப்பது நன்மை பயக்கும்.

இதைத்தொடர்ந்து, அக்டோபர் 11 ஆம் தேதி நவராத்திரி ஆரம்பிக்கிறது. அந்த வகையில், செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 4 முதல் 10 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் சிம்ம ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி, லக்கினம் சார்ந்த நபர்களுக்கு உறவுக்குள் இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். வாகனங்களில் செல்லும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். மன நிம்மதியும், சந்தோஷமும் ஏற்படும். துணை மற்றும் காதல் அமைப்பில் சந்தோஷம் ஏற்படும். எதிர்பார்க்காத நிறைய விஷயங்கள் நடைபெறும். இழுபறியாக சங்கடங்கள் பரிபூரணமாக நீங்கும். யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய காலகட்டம்.

சொத்து சேர்க்கை

தலைவலி, பாத வலி, முட்டி வலிகளில் மிகுந்த கவனம் தேவை. அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை ஏற்படும். மனதிற்குப் பிடித்த இடங்களுக்கு சென்று வருவீர்கள். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வரும். குடும்பத்தைப் பிரிந்து தொலைதூரப் பயணங்கள், உள்ளூர் பயணங்கள், வெளியூர் பயணங்கள் யோக பலத்தை பெற்றுத் தரும். பண வரவு, ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் ஏற்படும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும்.

ஞானம் அதிகரிக்கும்

விரயத்தில் இருக்கும் செவ்வாய், குரு, நல்ல பலமான இடத்தில் அமர்ந்திருக்கிறது. ஞானம் கொட்டக்கூடிய காலகட்டம். மனம் தெளிவடையும். புத்திசாலித்துடன் செயல்படுவீர்கள். எலக்ட்ரானிக் பொருள்களை வாங்கு மகிழ்வீர்கள். அஷ்டமத்தில் சனி, சந்திரன் சேர்ந்திருப்பதால் இரவு நேர பிரயாணம், வெளியூர் பயணம், வெளிநாடு பயணத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

வழிபாடு

திட்மிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் ஏற்படும். தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். எடுத்த காரியங்களஇல் ஜெயம் ஏற்படும். சிக்கல்கள், பாதிப்புகள் நீங்கும். பண வரவு அற்புதமாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஒருமுறைக்கு இருமுறை யோசித்து காரியத்தை செயல்படுத்துவீர்கள். முருகர், விநாயகர் வழிபாடு வெற்றியையும், மகிழ்ச்சியையும் தரும். சந்தோஷமும், பொருளாதா ஏற்றமும் 85 சதவீதம் ஏற்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+