Rasi palan this week: சிம்மம் ராசிக்கு நல்ல காலம் ஆரம்பம்.. புதிய வாய்ப்புகள், பணவரவு எப்படி?

Subscribe to Oneindia Tamil

Rasi palan this week: செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரையிலான (ஆவணி 21 முதல் 27) காலகட்டத்தில் சிம்மம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

rasi-palan-this-week-what-kind-of-benefits-will-get-simmam-rasi-people-from-sep-7-to-13

சூரிய பகவான் சிம்ம ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆவணி மாதமாகும். சூரியன் தனது சொந்த ராசியில் வந்து அமர்வதால் மிகவும் வலுவாக காணப்படுவார். ரத்த அழுத்தம், வெர்டிகோ உள்ளவர்கள் இந்த மாதத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில், செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரையிலான (ஆவணி 21 முதல் 27) காலகட்டத்தில் சிம்மம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

சிம்மம் ராசி பலன்

சிம்மம் ராசியினருக்கு பிஸியாக இருக்கும் காலகட்டம். எல்லா விஷயங்களிலும் வேகமாக முடிவெடுத்து அதில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். எடுத்த காரியங்கள் அனைத்தும் மின்னல் வேகத்தில் நடைபெறும். பொறுப்புகள் கூடும். நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். டாக்குமென்டேஷன் தொடர்பான விஷயங்களை செய்து முடிப்பீர்கள். இடமாற்றம், அலைச்சல் போன்றவை ஏற்படும்.

திருமண யோகம்

திருமண யோகம் உண்டாகும். நல்ல வரன்கள் கிடைக்கும். தாயின் ஆரோக்கியம் மேம்படும். புதன் ராசி லக்னத்தில் 2 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறது. சுக்கிரன் 3 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். பேச்சு, பணத்திற்கு குறைவே இருக்காது. இடம், நிலம், வீடு போன்ற விஷயங்களை வாங்கி முடிப்பீர்கள். நிறைய விஷயங்களில் புதிய முடிவுகளை எடுப்பீர்கள். அவை உங்களுக்கு சாதகமாக முடியும்.

கவனம்

துணையிடம் தர்க்கம், வாக்குவாதம் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. அந்நியோன்யம் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வாகனம், தொழில், அக்கம்பக்கத்தினர், மேலதிகாரிகள் விஷயத்தில் கவனம் தேவை. உறவினர்களால் தேவையில்லாத பதட்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அவர்களால் மன அழுத்தமும், சங்கடமும் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. மனதிற்குப் பிடித்த கோயில்களுக்குச் சென்று வருவது நல்லது.

பணவரவு

நீண்ட நாட்களாக இருந்த சங்கடங்கள் தீரும். கோபம், தாழ்வு மனப்பான்மை கொள்ளாமல் இருப்பது நல்லது. உறவுகள் விஷயத்தில் அதீத கவனம் தேவை. புதிதாக அறிமுகமாகும் நபர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். எந்த காரியத்தை எடுத்தாலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படுத்துவது நல்லது. பண வரவு நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

வழிபாடு

ஆவணி மாதம் முழுவதும் சூரியன் ராசியில் இருப்பதால் கோபம், வாக்குவாதம் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. அனுமன் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும்.மூக்கு, பற்கள் சார்ந்த பிரச்சனைகள் வந்து சரியாகும். தெய்வ அனுக்கிரகம் உண்டாகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 85 சதவீதம் நன்றாக இருக்கும். வெங்கடேச பெருமாள் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+