Rasi palan this week: துலாம் ராசிக்கு "காசு பணம் துட்டு மணி மணி".. குட்நியூஸ் ஆன் திவே
Rasi palan this week: செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரையிலான (ஆவணி 21 முதல் 27) காலகட்டத்தில் துலாம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் சிம்ம ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆவணி மாதமாகும். சூரியன் தனது சொந்த ராசியில் வந்து அமர்வதால் மிகவும் வலுவாக காணப்படுவார். ரத்த அழுத்தம், வெர்டிகோ உள்ளவர்கள் இந்த மாதத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில், செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரையிலான (ஆவணி 21 முதல் 27) காலகட்டத்தில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசியினருக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். பூமி சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்றம் உண்டாகும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். சுப விரயங்கள் ஏற்படும். குடும்பத்தில் அந்நியோன்யம் குறையக் கூடிய காலகட்டம். பதவி உயர்வு கிடைக்கும். சம்பள உயர்வு கிடைக்கும்.
இடம் வாங்கும் யோகம்
விரயத்தில் குரு அமர்ந்திருப்பதால் புதிய லோன் கிடைக்கும். புதிய இடமாற்றம் செய்வது, இடம் வாங்குவது, மருத்துவ செலவுகள் குறைவது போன்ற யோகம் உண்டாகும். ஆரோக்கியத்தில் அற்புதமான மாற்றம் உண்டாகும். சிறிய சிறிய சண்டை, சச்சரவுகள் வந்து போகும். எடுக்கக்கூடிய முடிவுகள் சாதகமாக நடக்கும். பல விஷயங்களில் ஏற்றம் ஏற்படும். எந்த விஷயமாக இருந்தாலும் அதை திட்டமிட்டு செய்தால் வெற்றி பெறுவீர்கள்.
முன்னேற்றம்
பொருளாதாரத்தில் திடீர் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத பண வரவுகள் உண்டாகும். முதலீட்டுகளில் இருந்து லாபம், வட்டி கிடைக்கும். நீண்ட காலங்களுக்கான திட்டமிடுவீர்கள். ஆரோக்கியத்தில் மேன்மை காணப்படும். பாசிட்டிவான காலகட்டமாக இருக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது.
பணவரவு
பண வரவு நன்றாக இருக்கும். சேமிப்பு, முதலீடுகள் அதிகரிக்கக்கூடும். குடும்பத்திலும், வெளியிடத்திலும் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். தொட்டது துலங்கக்கூடிய அற்புதமான காலகட்டம். தொழில், வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். இதுவரை இருந்து வந்த கஷ்டங்கள் தீர்ந்து யோக பலன்கள் கிடைக்கும்.
வழிபாடு
பிடித்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். புதன்கிழமைகளில் மதிய வேளைகளில் உணவு தானமாக அளிப்பது நன்மையைத் தரும். அபிராமி அந்தாதியைப் படிப்பது ஏற்றத்தைத் தரும். பெருமாள் வழிபபாடு, முருகன் வழிபாடு செய்வது, சுப்பிரமணிய புஜங்கத்தை கேட்பது நன்மை பயக்கும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 80 சதவீதம் நன்றாக இருக்கும்.


Click it and Unblock the Notifications
