ஆட்டத்தை ஆரம்பிக்கும் விருச்சிக ராசி.. 18 ஆம் தேதி முதல் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும்
Rasi palan this week: செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையிலான (ஆவணி 28 முதல் புரட்டாசி 3) காலகட்டத்தில் விருச்சிகம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

இந்த வாரத்தில் ஆவணி மாதம் நிறைவடைந்து புரட்டாசி மாதம் ஆரம்பிக்கவுள்ளது. புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதமாகும். சிம்மத்தில் இருக்கும் சூரிய பகவான் கன்னி ராசிக்கு வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம், கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் செப்டம்பர் 27 ஆம் தேதி மஹாளயபட்சம் ஆரம்பிக்கிறது. மஹாளய அமாவாசை அக்டோபர் 10 ஆம் தேதி வருகிறது. இந்த நாளில் ஏழைகளுக்கு உணவு தானமாக அளிப்பது, அரிசி பருப்பு வாங்கி கோயிலுக்கு கொடுப்பது நன்மை பயக்கும்.
இதைத்தொடர்ந்து, அக்டோபர் 11 ஆம் தேதி நவராத்திரி ஆரம்பிக்கிறது. அந்த வகையில், செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையிலான (ஆவணி 28 முதல் புரட்டாசி 3) காலகட்டத்தில் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிகம் ராசியினருக்கு லாப ஸ்தானம் வலுவாக இருப்பதால் 18 ஆம் தேதியில் இருந்து எதிர்பாராத தன வரவுகள் உண்டாகும். பண வரவு அற்புதமாக இருக்கும். எதிர்பாராத பெயர், புகழ், பதவி, சான்றிதழ், பாராட்டு கிடைக்கும். ஆனால், இவை அனைத்தும் மிகவும் தாமதமாக, தள்ளிப்போய் நடக்கும். அடுத்த ஒரு மாதத்திற்கு உங்கள் மூத்தவர்களாலும், நண்பர்களாலும் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
ஆரோக்கியம்
கால் எலும்பில் சிறு சிறு பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. கால்சியம் குறைபாடு வருவதற்கான வாய்ப்புள்ளது. எலும்புத் தேய்மானம், மூட்டு வலி வரும். சக ஊழியர்கள், நண்பர்கள் உங்கள் மேல் பொறாமைப்படும் நிலைமை இருக்கும். பதட்டமான நிலைமை, பொறாமை இருக்கும். நண்பர்கள், மூத்தவர்களை நம்பி பணம் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.
குரு அருள்
குரு பார்வையில் இருப்பதால் அற்புதமான ஏற்றம் ஏற்படும். பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. பணத்தை எங்கேயாவது கொண்டு போய் சிக்கிக் கொள்ளும் அமைப்புள்ளதால் கவனம் தேவை. அண்ணன், தம்பி யாருக்காவது பண உதவி செய்தால் திரும்பி வராது. தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும்.
சிக்கல் தீரும்
இழுபறியாக இருந்த சிக்கல்கள் மாறும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சங்கடங்கள் பரிபூரண நிவர்த்தியாகும். உறவினருக்கும், உங்களுக்கும் இருந்து வந்த சங்கடங்கள் பரிபூரண நிவர்த்தியாகும். யோக பலன்கள் அதிக அளவில் ஏற்படும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை ஏற்படும் செவ்வாய் நீச்சமாக இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும்.
வெற்றி மேல் வெற்றி
குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டு. ரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பு தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் விநாயகர் வழிபாடு ஏற்றத்தைத் தரும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 80 சதவீதம் நன்றாக இருக்கும். லட்சுமி நரசிம்மர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.


Click it and Unblock the Notifications
