Rasi palan this week: விருச்சிகம் ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் அஷ்டலட்சுமி.. தொட்டது தங்கமாகும் யோகம்
Rasi palan this week: செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரையிலான (ஆவணி 21 முதல் 27) காலகட்டத்தில் விருச்சிகம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் சிம்ம ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆவணி மாதமாகும். சூரியன் தனது சொந்த ராசியில் வந்து அமர்வதால் மிகவும் வலுவாக காணப்படுவார். ரத்த அழுத்தம், வெர்டிகோ உள்ளவர்கள் இந்த மாதத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில், செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரையிலான (ஆவணி 21 முதல் 27) காலகட்டத்தில் விருச்சிகம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிகம் ராசியினருக்கு அஷ்ட லட்சுமி கடாட்சம் உண்டாகும். தொட்டது துலங்கக்கூடிய நல்ல காலகட்டம். எதிரிகளை வெல்லும் யோகம் ஏற்படும். பொறுமையாக எல்லா காரியங்களையும் செய்வது நல்லது. குரு 9 ஆம் வீட்டில் இருப்பதால் பெற்றோர், பெரியோரின் ஆரோக்கியத்தை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். ரத்தத்தில் பரவும் நோய்களில் மிகுந்த கவனம் தேவை.
கோபம் வேண்டாம்
அனுகூலமும், சந்தோஷமும் ஏற்படும். உறவுகளிடம் இணக்கமாகச் செல்வது நல்லது. பிள்ளைகளிடம் கோபத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. நீண்ட நாட்களாக இருந்த கஷ்டங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். ஏற்றமும், நம்பிக்கையும் உண்டாகும். உறவுக்குள் இருந்து வந்த சங்கடங்கள், மனக்கசப்புகள் நீங்கும்.
பணவரவு
லாப ஸ்தானத்தில் புதன் அமர்ந்திருக்கிறார். அறிவு, புத்திசாலித்தனம் அதிகரிக்கும். பெயர், புகழ், அங்கீகாரம், பெரிய பணம் கிடைக்கும். எல்லா விஷயங்களும் மிக எளிமையாக நடக்கும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். எந்த விஷயமாக இருந்தாலும் அதில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பொறுப்புகள் அதிகரிக்கும். தள்ளிப்போய் எல்லா காரியங்களும் நடக்கும்.
தொட்டது துலங்கும்
எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய நல்ல காலகட்டம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்றம் ஏற்படும். எல்லோரிடமும் சிறிது இணக்கமாக, பொறுமையாக செல்வது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. லாபம் அதிகரிக்கும். உத்தியோகம், தொழிலில் நல்ல லாபங்கள் கிடைக்கும். பண வரவு அற்புதமாக இருக்கும்.
வழிபாடு
எந்த காரியத்தை ஆரம்பித்தாலும் அதில் வெற்றி பெறுவீர்கள். குருவின் பார்வை பலம் இருப்பதால் அற்புதமான முன்னேற்றங்கள் ஏற்படும். மதுரை மீனாட்சி சுந்தரேஷ்வரர் வழிபாடு, துர்க்கை வழிபாடு சுபகாரியத்தில் இருந்து வந்த சிக்கல்களைத் தீர்க்கும். குருவின் பார்வையில் இருப்பதால் சுபிக்ஷம் உண்டாகும். சுபவிரயம் ஏற்படும். மன தாங்கல்கள், மன கஷ்டம் கொள்ளாமல் இருப்பது நன்மை பயக்கும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 90 சதவீதம் நன்றாக இருக்கும்.


Click it and Unblock the Notifications
