Rasi Palan This Week: கடக ராசிக்கு கொட்டும் யோகம்.. தங்கம், வெள்ளி, சேமிப்பு அதிகரிக்கும்
Rasi Palan This Week: மே 11 ஆம் தேதி முதல் மே 18 ஆம் தேதி வரை, சித்திரை 28 ஆம் தேதி முதல் வைகாசி 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

இந்த வாரம் சித்திரை முடிந்து வைகாசி மாதம் பிறக்கிறது. அந்த வகையில், மே 11 ஆம் தேதி முதல் மே 18 ஆம் தேதி வரை, சித்திரை 28 ஆம் தேதி முதல் வைகாசி 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
கடகம் ராசி பலன் (Kadagam Rasi Palan)
கடக ராசியினருக்கு இடமாற்றம், வீடு மாற்றம், வியாபார மாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம் என அனைத்து விதமான மாற்றங்களும் இந்த வைகாசி மாதம் முதல் ஏற்படும். ஜென்மத்தில் குரு வருவதால் படபடப்புகள், கழிவுப் பாதை தொடர்பான பாதிப்புகள், முதுகுத் தண்டுவடம் தொடர்பான பாதிப்புகள் விஷயத்தில் வரும் ஒன்றரை வருடத்திற்கு மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
கோபம் வேண்டாமே
எல்லா விஷயங்களும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற மனநிலையை மாற்றிக் கொள்வது, கோபப்படுவதை தவிர்க்க வேண்டம். வேலையாட்கள், எதிரிகள் மீது கோபம் இல்லாமல் இருக்க வேண்டும். எதிரிகள் விஷயத்தில் கோபம் இல்லாமல், அவர்களை குறைவாக மதிப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். எல்லா விஷயங்களையும் பொறுமையாக கையாளுவது நன்மை பயக்கும்.
நிலை மாறும்
அற்புதமான காலகட்டமாக இருக்கும். சனி செவ்வாய் சேராமல் இருப்பது உங்களுக்கு ஏற்றத்தை ஏற்படுத்தம். இல்லையெனில் எந்த முயற்சி எடுத்தாலும் அதை சண்டை போட்டு செய்யக்கூடிய நிலைமை ஏற்படும். சிறியதாக செய்யக்கூடிய விஷயங்களைக் கூட சண்டை போட்டு செய்யும் நிலைமை ஏற்படும். இழுபறியாக எல்லா விஷயங்களும் நடக்கும். எல்லா முயற்சிகளும் தட்டிப் போகும் என்ற நிலைமைகள் இப்போது மாறும்.
தொழில்
தொழில் நன்றாக நடக்கும். அரசியலில் வெற்றி பெறும் யோகம் ஏற்படும். நீட் தேர்வு, ஐஐடி, சிஏ என அனைத்து விதமான போட்டித் தேர்வுகளிலும் வெற்றி பெறும் யோகம் உண்டு. லாப ஸ்தானத்தில் சூரியன், புதன் அமர்ந்திருப்பதால் நண்பர்களிடம் பணம் கொடுத்தால் திரும்பி வராது. கால் முட்டியில் அடிபடும் வாய்ப்புள்ளது. எலும்பில் தேய்மானம் ஏற்படும். அதனால் கவனம் தேவை.
பணம் சேரும்
பணம் சேர்க்கும் யோகம் உண்டு. தங்கம், வெள்ளி சேர்க்கும் யோகம் உண்டாகும். ஆன்லைனில் பணம் வந்து சேரும். சேமிப்புத் திட்டங்களை ஆரம்பிப்பீர்கள். நகை சீட்டு போடுவீர்கள். அற்புதமான இன்பம் காத்திருக்கும். பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கும் யோகம் உண்டாகும். சந்தோஷம் ரீதியா 80 சதவீதமும், பொருளாதார ஏற்றம் 90 சதவீதமும் நன்றாக இருக்கும். உக்கிர நரசிம்மர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.
நிறைய உதவிகளை செய்வீர்கள். நல்ல காரியங்கள் அடுத்தடுத்து நடக்கும். மகான்கள் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications