தடைகளைத் தகர்த்தெறியும் கடக ராசி.. நினைத்தது நடக்கும் யோகம்.. இந்த வார பலன் முழு விவரம்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: நவம்பர் 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 30 ஆம் தேதி முதல் கார்த்திகை 6 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் கடகம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

rasi-palan-this-week-what-kind-of-benefits-will-kadagam-people-get-from-november-15-to-22

கார்த்திகை மாதம் இந்த வாரம் பிறக்கவுள்ளது. விருச்சிக ராசியில் சூரியன் வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதமாகும். விருச்சிகம் என்பது செவ்வாய் வீடு. பகை வீட்டில் சூரியன் இருக்கிறார். பெரிய தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள், இசைக் கலைஞர்கள் எல்லோரும் இந்த மாதத்தில் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். பல்வேறு முக்கிய கிரக மாற்றங்கள் நிகழ்ந்துள்ள நிலையில், நவம்பர் 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 30 ஆம் தேதி முதல் கார்த்திகை 6 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் கடக ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

கடகம் ராசி பலன்

கடகம் ராசி, லக்கினம் சார்ந்த நபர்களுக்கு பஞ்சம ஸ்தானத்தில் சூரியன் இருக்கிறார். நினைத்த காரியங்களில் வெற்றி பெறக்கூடிய யோகம் உண்டாகும். உடம்பில் உஷ்ணம் அதிகரிக்கும். சண்டைகள் வரும். உங்களை நேர்மையாக இருக்க விடாமல் சிலர் தடுப்பார்கள். குடும்பத்தில் ரணகளமான சில விஷயங்கள் நடக்கும். குடும்பத்தில் ஒற்றுமை இருக்காது. எதையும் செய்ய முடியாத நிலைமை ஏற்படும்.

முன்னேற்றம்

பக்குவ நிலையை இழந்து இருக்கக்கூடிய நிலைமை ஏற்படும். 4 ஆம் இடத்தில் புதனும், 3 ஆம் இசத்தில் சுக்கிரனும் நல்ல அமைப்பில் உள்ளதால் பயப்பட வேண்டிய அவசியமில்லை. எல்லா விஷயத்தையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள். படிப்பில் நல்ல முன்னேற்றத்தைப் பார்க்க முடியும். புதிய வண்டி வாகனங்கள், செல்போன் போன்றவற்றை வாங்கி மகிழ்வீர்கள்.

கவனம்

பல் எடுப்பது, மூக்கில் சிறு பிரச்சனை வந்து சரியாகும். முடியால் தொற்று, தொற்றுநோய் வரும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. கடகத்தில் பாக்கியத்தில் இருக்கும் சனி வக்கிரமாக இருக்கிறது. சந்திரனும் சேர்ந்திருக்கிறது. பிரயாணங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். எந்த விஷயத்தை திட்டமிட்டாலும் அதனை நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள்.

கோபம் வேண்டாம்

நரம்பு தொடர்பான பாதிப்பில், குடும்ப விஷயத்தில் கவனம் தேவை. பிள்ளையார் வழிபாடு செய்வது, காரியசித்தி மாலையை தினந்தோறும் படிப்பது நந்மை பயக்கும். துணை விஷயத்தில் கோபத்தைத் தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவி விஷயத்தில் அவசரப்பட்டு முடிவெடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. சனி 9 இல் இருப்பதால் பலவிதமான நன்மைகளைத் தரும். உடனிருப்பவர்கள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

ஆரோக்கியம்

பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்வதை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் புகழ் வெளிச்சம் பெறுவீர்கள். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். ஆரோக்கியத்தில் நீண்ட நாட்களாக தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்த பிரச்சனை தீரும். யோக பலன்கள் கிடைக்கும். தொழில், வியாபாரம், உத்தியோகம், படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

முருகர் வழிபாடு

தனிப்பட்ட செல்வாக்குகள் கூடும். இதுவரை இருந்து வந்த கஷ்டங்கள் எல்லாம் தீரும். வியாபாரத்தில் இருந்து வந்த சங்கடங்கள் நிவர்த்தியாகும். மனதில் நினைத்த காரியங்கள் தானாக நடக்கும். திருச்செந்தூர் முருகப் பெருமானை மனதாரா வழிபாடு செய்வது நன்மை பயக்கும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 75 சதவீதம் நன்றாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+