Kumbam: கஷ்டங்களுக்கு குட்பை.. வேலை, தொழிலில் ஜெயம்.. கும்ப ராசிக்கு காத்திருக்கும் மெகா மாற்றம்
வார ராசி பலன்: நவம்பர் 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 30 ஆம் தேதி முதல் கார்த்திகை 6 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் கும்ப ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

கார்த்திகை மாதம் இந்த வாரம் பிறக்கவுள்ளது. விருச்சிக ராசியில் சூரியன் வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதமாகும். விருச்சிகம் என்பது செவ்வாய் வீடு. பகை வீட்டில் சூரியன் இருக்கிறார். பெரிய தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள், இசைக் கலைஞர்கள் எல்லோரும் இந்த மாதத்தில் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். பல்வேறு முக்கிய கிரக மாற்றங்கள் நிகழ்ந்துள்ள நிலையில், நவம்பர் 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 30 ஆம் தேதி முதல் கார்த்திகை 6 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் கும்ப ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
கும்ப ராசி பலன்
கும்ப ராசி, லக்கினம் சார்ந்த நபர்களுக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் ஏற்றம் ஏற்படும். அரசாங்க உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நன்மைகள் அதிகரிக்கும். 70 வயதுக்குள் இருக்கும் கும்ப ராசியினருக்குப் படிப்படியாக எல்லா விஷயங்களிலும் ஜெயம் ஏற்படும். இதுவரை இருந்து வந்த கஷ்டங்களில் இருந்து எல்லாம் நிவர்த்தி ஏற்படும்.
அனுகூலம்
தெய்வமார்க்கப் பயணங்கள் அனுகூலத்தைத் தரும். துணையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் மற்றவர்களின் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல, மற்றவர்களின் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடக் கூடாது. தொழில் ரீதியாக காணப்பட்டிருந்த சிக்கல்கள் எல்லாம் நிவர்த்தியாகும். லாபம், சந்தோஷம் அனுகூலம் ஏற்படும்.
பேச்சு, செலவில் கவனம்
எல்லா விஷயங்களும் இனி நேர்மறையாக நடக்கும். மே மாதத்திற்குப் பிறகு மீண்டும் அற்புதமான மாற்றம் ஏற்படும். பேச்சில் மிகுந்த கவனம் தேவை. செலவிலும் கவனம் தேவை. பணத்தை எங்கேயும் கொண்டு போய் மாட்டிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. வேலையில் கடும் அவஸ்தைகள் ஏற்படும். வேலையில் அழுத்தம் அதிகரிக்கும். மேலதிகாரியின் ஆரோக்கியம் அடிபடும் என்பதால் உங்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கும்.
மாற்றம்
நம்பிக்கை இல்லாத ஆட்களை தூரமாக வைப்பது நல்லது. கால் முட்டியில் அடிபடுவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. ஒரு சிலருக்கு கண்ணில் அறுவை சிகிச்சை நடைபெறுவதற்கான வாய்ப்புள்ளது. மற்றபடி பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. இடமாற்றம், தொழில் மாற்றம், வியாபார மாற்றம், உத்தியோக மாற்றம் என அனைத்து வித நல்ல மாற்றங்களும் ஏற்படும்.
வழிபாடு
திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் அமைப்பு. சுப காரியத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். மறைமுக எதிரிகள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். உங்களுடைய எண்ணம் சரியாக இருக்க வேண்டும். தொண்டைப் பகுதி, பல், கழுத்து தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை. பிள்ளையார் வழிபாடு சகலவித நன்மைகளைத் தரும்.


Click it and Unblock the Notifications
