Magaram: நிலம் வாங்கும் யோகம்.. தொழிலில் ராஜயோகம்.. மகர ராசிக்கு அதிர்ஷ்டம் அள்ளித்தரும் வாரம்
வார ராசி பலன்: நவம்பர் 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 30 ஆம் தேதி முதல் கார்த்திகை 6 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் மகர ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

கார்த்திகை மாதம் இந்த வாரம் பிறக்கவுள்ளது. விருச்சிக ராசியில் சூரியன் வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதமாகும். விருச்சிகம் என்பது செவ்வாய் வீடு. பகை வீட்டில் சூரியன் இருக்கிறார். பெரிய தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள், இசைக் கலைஞர்கள் எல்லோரும் இந்த மாதத்தில் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். பல்வேறு முக்கிய கிரக மாற்றங்கள் நிகழ்ந்துள்ள நிலையில், நவம்பர் 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 30 ஆம் தேதி முதல் கார்த்திகை 6 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் மகர ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
மகர ராசி பலன்
மகர ராசி, லக்கினம் சார்ந்த நபர்களுக்கு குடும்பத்தில் அந்நியோன்யம் கெடுப்பதற்கு உங்களுக்கு எதிராக செயல்படுவார்கள். உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. அதேபோல, மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. சுப விரயம் ஏற்படும். கொடுத்த வாக்கை குடும்பத்திலும், வெளியிடத்திலும் காப்பாற்றுவீர்கள்.
தொழில்
தொழில் ரீதியாக லாபமும், முன்னேற்றமும் ஏற்படும். சனியின் தாக்கம் உங்களுக்கு அற்புதமான மாற்றத்தைத் தரும். மனதில் இருந்த குறைகள் எல்லாம் படிப்படியாகத் தீரும். திருமணத் தடைகள் நீங்கும். குடும்பத்தில் இருந்து வந்த தேவையில்லாத பிரச்சனைகள் வந்து போகும். எடுத்த காரியங்களில் எல்லாம் ஜெயித்தக் காட்டுவீர்கள். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை ஏற்படும். வெளியுலகத்தில் ஜெயித்துக் காட்டக்கூடிய அமைப்பு.
முன்னேற்றம்
அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். விவசாயத்தில் அதீத ஈடுபாடு ஏற்படும். நிலம் வாங்கும் அமைப்பு உள்ளது. தொழிலில் புரட்சி செய்வீர்கள். தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள். சகலவிதத்திலும் நன்மையும், சந்தோஷமும் ஏற்படும். புதிய முடிவுகள் சாதகமாக இருக்கும். வேலை, தொழிலில் பிரச்சனைகள் இருக்காது.
திடீர் சந்தோஷம்
மாணவ, மாணவிகளுக்கு ஏற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். பெரியவர்களிடம், வேலை பார்க்கும் இடத்தில் சிறு சிறு பிரச்சனைகள் வந்து போகும். பெரிதளவில் பயப்படத் தேவையில்லை. நீங்கள் நம்புவது நடக்கும். திடீர் சந்தோஷத்தை அனுபவிப்பீர்கள். பயணங்களில், வண்டி வாகனங்களில், தகவல் தொடர்பில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
பரிகாரம்
பதட்டம், டென்ஷனை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களை சந்தேகப்படுவதைத் தவிர்ப்பது நல்லது. இடுப்பு, புட்டம், ஆசனவாய், அடிவயிறு தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை. வயிறு சம்பந்தப்பட்ட விஷயத்தில் அதீத கவனமாக இருப்பது நன்மையையும், அனுகூலத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.
வழிபாடு
அம்பாள் வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 75 சதவீதம் அற்புதமாக இருக்கும். சாய்பாபா கோயிலுக்கு நெய் அல்லது வெள்ளைச் சர்க்கரை தானமாகக் கொடுப்பது நன்மை பயக்கும்.


Click it and Unblock the Notifications
