“இனி எல்லாமே நம்ம பக்கம்”.. மகர ராசிக்கு புதிய வேலை முதல் வீடு வாங்கும் யோகம் வரை

Subscribe to Oneindia Tamil

Rasi palan this week: ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் செப்டம்பர் 6 ஆம் தேதி வரையிலான (ஆவணி 14 முதல் 20) காலகட்டத்தில் மகர ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். சூரிய பகவான் சிம்ம ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆவணி மாதமாகும்.

rasi-palan-this-week-what-kind-of-benefits-will-magaram-rasi-people-get-this-week

சூரியன் தனது சொந்த ராசியில் வந்து அமருவதால் மிகவும் வலுவாக காணப்படுவார். ரத்த அழுத்தம், வெர்டிகோ உள்ளவர்கள் இந்த மாதத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில், ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் செப்டம்பர் 6 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் (ஆவணி 14 முதல் 20 ஆம் தேதி வரை) மகர ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

மகர ராசி பலன்

மகர ராசியினருக்கு எல்லா விதத்திலும் ஏற்றங்கள் உண்டாகும் காலகட்டம். இழுபறியாக இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். குடும்பத்தில் அந்நியோன்யமாக இருக்க வேண்டும். அடுத்தடுத்து சுபகாரியங்கள் நடக்கும். வண்டி, வாகனங்களில் வித்தைகள் காட்டாமல் இருப்பது நன்மையைத் தரும். ரத்த அழுத்தம், சர்க்கரை, நரம்பு தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

புதிய வேலை

வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும், மனைவிக்கு யோகம் ஏற்படும். மனைவியால் உங்களுக்கு யோகம் ஏற்படும். புதிய தொழில் தொடங்குவதற்கான யோகம் ஏற்படும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வீடு வாங்குவது, வீடு கட்டுவது, ரெஜிஸ்டிரேஷன் செய்வது போன்ற யோகம் உண்டாகும். சாதகமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும்.

முன்னேற்றம்

தள்ளிப்போன எல்லா விஷயங்களும் சாதகமாக நடக்கும். முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள். எடுத்த காரியங்களை எளிமையாகவும், விரைவாகவும் முடியும். தைரியமும், தன்னம்பிக்கையும் ஏற்படும். பயப்படாமல் எல்லா விஷயத்தையும் செய்வீர்கள். 2, 3, 4, 5 ஆகிய 4 நாட்கள் அற்புதமாக இருக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அம்மாவின் சொத்துகள் கிடைக்கும், ஆதரவு கிடைக்கும்.

வழிபாடு

குருவாக இருப்பவர்களின் மூலம் நன்மை கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த சங்கடங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். திங்கள்கிழமை தோறும் நவக்கிரகத்தில் விளக்கேற்றுவது சகலவிதத்தில் நன்மைகளை ஏற்படுத்திக் கொடுக்கும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 80 சதவீதம் நன்றாக இருக்கும். ஸ்ரீ கிருஷ்ணர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+