மீனம் ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. ஜென்மசனி இருப்பதால் இந்த விஷயத்தில் கவனம்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: நவம்பர் 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 30 ஆம் தேதி முதல் கார்த்திகை 6 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் மீன ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

rasi-palan-this-week-what-kind-of-benefits-will-meenam-people-get-from-november-15-to-22

கார்த்திகை மாதம் இந்த வாரம் பிறக்கவுள்ளது. விருச்சிக ராசியில் சூரியன் வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதமாகும். விருச்சிகம் என்பது செவ்வாய் வீடு. பகை வீட்டில் சூரியன் இருக்கிறார். பெரிய தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள், இசைக் கலைஞர்கள் எல்லோரும் இந்த மாதத்தில் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். பல்வேறு முக்கிய கிரக மாற்றங்கள் நிகழ்ந்துள்ள நிலையில், நவம்பர் 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 30 ஆம் தேதி முதல் கார்த்திகை 6 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் மீன ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

மீன ராசி பலன்

மீன ராசி, லக்கினம் சார்ந்த நபர்களுக்கு ஜென்மசனி உள்ளதால் உடற்பயிற்சி மிகவும் முக்கியம். அடிவயிறு, கால் பகுதி, கழிவுப் பாதை, மூட்டுகள் தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை. வண்டி வாகனத்தில் செல்லும்போதும், படிக்கட்டுகளில் ஏறி இறங்கும் போதும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். நரசிம்மர் கவசம் உங்களை மேன்மையடையச் செய்யும்.

முன்னேற்றம்

உறவுகள் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றத்திற்கு குறைவிருக்காது. எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். இதுவரை இருந்து வந்த கஷ்டங்கள் தீரும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். சுப காரியத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும்.

சந்தோஷம்

கொடுத்த வாக்கை குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் காப்பாற்றுவீர்கள். பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சிகள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. வேற்று மொழி மனிதர்களால் ஆதாயம் ஏற்படும். ஜென்மசனியில் நிறைய சந்தோஷங்கள் கார்த்திகை, மார்கழி, தை ஆகிய 3 மாதங்களில் தொடர்ச்சியாக நன்மையை ஏற்படுத்தும்.

தொழில் தொடங்கும் யோகம்

பெற்றோர் பெரியவர்களுடன் வாக்குவாதம், உறவுகளுடன் தர்க்கம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. ரத்த பந்த சொந்தங்களிடம் கோபத்தை தவிர்க்க வேண்டும். புதிதாக அறிமுகமாகும் நபர்களிடம் கோபம் கொள்ளக் கூடாது. பசு மாடுகளுக்கு செவ்வாய்க்கிழமைகளில் உணவளிப்பது தடைகள் எல்லாம் நிவர்த்தியாகும். புதிய தொழில் தொடங்குவதற்கு தைரியமே மூலதனமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+