மீன ராசிக்கு இந்த வாரம் ‘ட்விஸ்ட்’ இருக்கு.. எதிர்பாராத இடத்தில் இருந்து வரும் நல்ல செய்தி

Subscribe to Oneindia Tamil

Rasi palan this week: ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் செப்டம்பர் 6 ஆம் தேதி வரையிலான (ஆவணி 14 முதல் 20) காலகட்டத்தில் மீன ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். சூரிய பகவான் சிம்ம ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆவணி மாதமாகும்.

Meenam

சூரியன் தனது சொந்த ராசியில் வந்து அமருவதால் மிகவும் வலுவாக காணப்படுவார். ரத்த அழுத்தம், வெர்டிகோ உள்ளவர்கள் இந்த மாதத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில், ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் செப்டம்பர் 6 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் (ஆவணி 14 முதல் 20 ஆம் தேதி வரை) மீன ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

மீன ராசி பலன்

மீன ராசியினருக்கு அஷ்டமத்தில் சுக்கிர பகவான் இருக்கிறார். பணம், பொருளாதாரம் அற்புதமாக இருக்கும். எதிர்பார்க்காத பண வரவு, தன பாக்கியம் உண்டாகும். சிறுநீரகப் பாதையில் பிரச்சனை வரும் பாதிப்புள்ளது. கிட்னியில் கல் இருப்பவர்கள் கவனம் தேவை. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது நன்மை பயக்கும்.

முயற்சிகளில் வெற்றி

2, 3, 4, 5 ஆம் தேதிகளில் வராத பணங்கள் வந்து சேரும். எதிர்பாராத பயணங்கள் நடக்கும். முயற்சிகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக முடியும். நம்பிக்கையாக பல விஷயங்களை செய்வீர்கள். அது நிச்சயமாக ஜெயிக்கும். சொந்த வீடு வாங்கும் யோகம் உண்டாகும். சொத்து தொடர்பான விஷயங்களில் ஏற்றம் ஏற்படும். எடுக்கக்கூடிய முயற்சிகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். எல்லா விஷயங்களும் சிரமமில்லாமல் நடக்கும். காலகட்டம்.

நம்பிக்கை

திறமையாக நின்று எல்லா விஷயத்தையும் சாதிக்கும் அற்புதமான நேரம். புதிய முயற்சி, புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உழைப்புக்கு அஞ்சாமல் இருந்தால் அனைத்தும் உங்களுக்கு வெற்றியைத் தரும். தலைசுற்றல் வருவதற்கான வாய்ப்புள்ளது. பிள்ளைகள் விஷயத்தில் கோபம் கொள்வதை தவிர்ப்பது நல்லது. தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயத்திலும் ஏற்றமும், நம்பிக்கையும் ஏற்படும். புதன்கிழமையில் பார்வதிதேவிக்கு வெண்தாமரை சாற்றுவது சந்தோஷமான பலனை ஏற்படுத்தித் தரும்.

வெற்றி மேல் வெற்றி

துணையின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் அந்நியர் தலையீடு, பிறர் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. வெற்றிகளை குவிக்கக்கூடிய காலகட்டம். வழக்குகளில் வெற்றி, தொழிலில் வெற்றி, உத்தியோகத்தில் வெற்றி, வியாபாரத்தில் வெற்றி, படிப்பில் வெற்றி அதிகரிக்கும் காலகட்டம். நீண்ட நாட்களாக இருந்த தடைகள் அனைத்தும் தவிடு பொடியாகும்.

மாற்றம், முன்னேற்றம்

இடமாற்றம், தொழில் மாற்றம் யோக பலத்தை ஏற்படுத்தும். நீண்ட நாட்களாக இருந்த மனக் கசப்புகள் தீரும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். நிலம் சம்பந்தப்பட்ட, ஆடை, ஆபரணங்கள் சம்பந்தப்பட்ட விஷயங்கள் கைகூடும். சந்தோஷமும் பொருளாதார ஏற்றமும் 80 சதவீதம் நன்றாக இருக்கும். ஸ்ரீ கிருஷ்ணர் வழிபாடு ஏற்றத்தைத் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+